ஆஃபர் விலையில் விற்பனை.. OnePlus-ன் லேட்டஸ்ட் 40-இன்ச் TV.. நம்பி வாங்க 3 காரணங்கள்!
சில நாட்களுக்கு முன்பு ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவியாக ஒன்பிளஸ் டிவி 40 ஒய்1எஸ் (OnePlus TV 40 Y1S) இந்தியாவில் அறிமுகமானது. இது வழக்கமான 32-இன்ச் மற்றும் 43-இன்ச் மாடல்களுக்கு இடையே அறிமுகமாகியுள்ள ஒரு 40-இன்ச் ஸ்மார்ட் டிவியாகும்.
இந்திய அறிமுகத்தின் போது அறிவிக்கப்பட்டபடியே இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் ஓப்பன் சேல் (Open Sale) ஏப்ரல் 14 முதல் தொடங்கியது. இந்த டிவியின் அசல் மற்றும் ஆஃபர் விலை என்ன? இந்த டிவியை நம்பி வாங்கலாமா? இதற்கு பதில் வேறு என்னென்ன டிவிகளை கருத்தில் கொள்ளலாம்? இதோ விவரங்கள்:

நம்பி வாங்கலாமா? ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் கொண்டு இயங்கும் ஒரு 40 இன்ச் ஸ்மார்ட் டிவியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த ஒன்பிளஸ் டிவியை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம். ஏனென்றால் இது ஃபுல் எச்டி ரெசல்யூஷனை கொண்ட 40 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் இது சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குவதற்காக எச்டிஆர் 10, எச்டிஆர் 10+ மற்றும் எச்எல்ஜி ஃபார்மட் சப்போர்ட்டையும் (HLG Format Support) கொண்டுள்ளது. கடைசியாக இந்த டிவி 20W ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டமுடன் வருகிறது, இது டால்பி ஆடியோவையும் (Dolby Audio) ஆதரிக்கிறது.
கவனிக்க வேண்டிய மற்ற அம்சங்கள்: இதன் டிஸ்பிளேவில் மெல்லிய பெஸல்களே (Thin Bezels) உள்ளன. ஆனால் கீழ் பக்கத்தில் தடிமனான பெஸல்களை காணமுடிகிறது. இதிலுள்ள காமா எஞ்சின் (Gama Engine) காட்சியின் தரத்தை மேம்படுத்தும் மற்றும் அதி-தெளிவான கன்டென்ட்டையும் உறுதி செய்யும்.
மேலும் இந்த டிவி மீடியாடெக் MT9216 குவாட் கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது மாலி G32 MP2 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜை பொறுத்தவரை, 8ஜிபி இன்டர்னல் மற்றும் இது 1ஜிபி ரேம் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு டிவி 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் ஆக்ஸிஜன் பிளே 2.0-க்கான ஆதரவையும் கொண்டுள்ளது
கனெக்டிவிட்டி (Conectivity) ஆப்ஷன்களை பொறுத்தவரை, டூயல்-பேண்ட் வைஃபை, டேட்டா சேவர், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் (Built-in Chromecast), மிராகாஸ்ட் (Miracast), இரண்டு எச்டிஎம்ஐ 2.0 போர்ட், இரண்டு யூஎஸ்பி டைப்-சி போர்ட், RJ45 கனெக்டர் போர்ட் மற்றும் ப்ளூடூத் v5.0 போன்றவைகளை கொண்டுள்ளது.
அசல் மற்றும் ஆஃபர் விலை: இது ஒன்பிளஸ்.இன் (OnePlus.in), அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒருவேளை நீங்களொரு ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளராக இருந்தால், ஐசிஐசிஐ பேங்க் டெபிட் கார்டு, இஎம்ஐ மற்றும் நெட் பேங்கிங்கை பயன்படுத்தினால் ரூ.1500 வரையிலான உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
இந்த டிவிக்கு பதிலாக வேறு எந்த டிவியை வாங்கலாம்? இதே விலை வரம்பில் வாங்க கிடைக்கும் சியோமி எம்ஐ டிவி 5ஏ (Xiaomi Mi TV 5A) மாடலை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். இதன் விலை ரூ. 22,999. அடுத்ததாக ரியல்மி ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவியை (Realme FHD LED Smart TV) கூட கவனத்தில் கொள்ளலாம். இதன் விலை ரூ. 19,999.


Click it and Unblock the Notifications








