Home
Gadgets

1 எதுக்கு.. 2 வாங்குவீங்க.. ரூ.11,499 போதும்.. QLED டிவி.. டால்பி ஆடியோ.. ஆர்டர் பிச்சிக்கும்.. எந்த மாடல்?

கியூஎல்இடி டிவி பிரியர்களை அறக்க பறக்க விடும்படியான பட்ஜெட்டில் தாம்சன் நிறுவனத்தின் புதிய 32 இன்ச் மற்றும் 75 இன்ச் கியூஎல்இடி டிவிகள் களமிறங்கி இருக்கின்றன. இதில் 32 இன்ச் தாம்சன் கியூஎல்இடி டிவியானது (32 inch Thomson QLED TV) கம்மி பட்ஜெட்டில் டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆடியோ, கூகுள் ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் கொண்டிருக்கிறது. அதேபோல 75 இன்ச் கியூஎல்இடி டிவியில் டால்பி விஷன் மற்றும் அட்மோஸ் ஆடியோ வருகிறது. இதுகுறித்த விவரம் இதோ.

இந்த டிவிகள் பிளிப்கார்ட் கோட் விற்பனையின் (Flipkart GOAT Sale) போது ஆர்டருக்கு கிடைக்க இருக்கின்றன. வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரையில் இந்த விற்பனை நடக்க இருக்கிறது. இந்த தாம்சன் கியூஎல்இடி டிவிகளின் பட்ஜெட்டுக்கு முன்பு முழு பீச்சர்களையும் பார்த்து விடுவோம்.

1 எதுக்கு! 2 வாங்குவீங்க.. ரூ.11499 போதும்.. QLED டிவி.. டால்பி ஆடியோ!

75 இன்ச் தாம்சன் க்யூஎல்இடி டிவி அம்சங்கள் (75 inch Thomson QLED TV Specifications): இந்த தாம்சன் டிவியில் பெசல்-லெஸ் டிசைன் (Bezel-less Design) கொண்ட 75 இன்ச் கியூஎல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 4K ரெசொலூஷன் வருகிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV) சப்போர்ட் உள்ளது.

ஆகவே, கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், கூகுள் பிளே ஸ்டோர், குரோம்காஸ்ட் உள்ளிட்ட பீச்சர்கள் வருகின்றன. இந்த 75 இன்ச் தாம்சன் க்யூஎல்இடி டிவியில் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. 40W டால்பி ஆடியோ (Dolby Audio) அவுட்புட் கொண்ட ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள் (Stereo Box Speakers) வருகின்றன.

டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) போன்ற வீடியோ பீச்சர்கள் வருகின்றன. அதேபோல டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), டிஜிட்டல் ட்ரூசரவுண்ட் (DTS TrueSurround) ஆடியோ சப்போர்ட் வருகிறது. டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) கனெக்டிவிட்டி வருகிறது.

மேலும், வழக்கமான எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத், ஏவி கேபிள், கேமிங் கன்சோல் போன்ற கனெக்டிவிட்டியும் வருகிறது. ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் இருக்கின்றன. இந்த டிவியின் விலைக்கு முன்பு 32 இன்ச் கியூஎல்இடி டிவியில் பீச்சர்களை பார்த்துவிடலாம்.

32 இன்ச் தாம்சன் க்யூஎல்இடி டிவி அம்சங்கள் (32 inch Thomson QLED TV Specifications): இதுவொரு Q32H1111 மாடலாகும். இந்த தாம்சன் டிவியில் 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கூகுள் ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Google Android TV OS) சப்போர்ட் வருகிறது.

ஆகவே, நெட்பிளிக்ஸ், யூடியூப், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ உள்ளிட்ட ஆப்கள் வருகின்றன. இந்த பட்ஜெட்டிலும் டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) சப்போர்ட் உடன் 48W ஆடியோ அவுட்புட் வருகிறது. டிவிபி-டி2 டிஜிட்டல் டிவி (DVB-T2 digital TV) சப்போர்ட் உள்ளது. எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, வை-பை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளது.

இந்த 32 இன்ச் தாம்சன் கியூஎல்இடி டிவியின் விலை ரூ.11,499ஆக இருக்கிறது. அதேபோல 75 இன்ச் தாம்சன் டிவியின் விலை ரூ.79,999ஆக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. கம்மியான பட்ஜெட்டில் கியூஎல்இடி டிவி வேண்டுமானால், வரும் ஜூலை 19ஆம் தேதி பிளிப்கார்ட் கோட் விற்பனையில் ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New 32 inch Thomson QLED TV launched in India Sale From Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X