இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!

|

ஒரு லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவியில், விலையை மீறிய அம்சங்கள் இருந்தால்.. அதுவும் அந்த TV, ஒரு பிரபலமான நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தால்.. அந்த மாடலை "ஒரு நல்ல ஸ்மார்ட் டிவி" என்று கூறாமல்.. பிறகு எப்படி கூறுவது?

அப்படி என்ன மாடல்? இது எந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

நாம் இங்கே பேசும்

நாம் இங்கே பேசும் "அந்த" நல்ல டிவி.. Xiaomi-யின் புதிய டிவி ஆகும்!

சியோமி நிறுவனம், இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. அது 32-inch Xiaomi Smart TV 5A Pro மாடல் ஆகும்.

இது சியோமி நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவியாக அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, இது விலையை மீறிய சில சுவாரசியமான அம்சங்களை பேக் செய்கிறது என்றே கூறலாம். கண்டிப்பாக இந்த மாடல் Xiaomi Smart TV 5A சீரீஸின் கீழ் தான் "அமரும்" என்பதில் சந்தேகம் வேண்டாம்.

புது ஃப்ரிட்ஜ் வாங்கும் போது மறக்காம புது ஃப்ரிட்ஜ் வாங்கும் போது மறக்காம "இது" இருக்கானு கேளுங்க! இல்லனா வாங்காதீங்க!

Realme, OnePlus, VU-வின் பல 32-இன்ச் மாடல்களுக்கு வேட்டு வைக்கும் விலை, அம்சங்கள்!

Realme, OnePlus, VU-வின் பல 32-இன்ச் மாடல்களுக்கு வேட்டு வைக்கும் விலை, அம்சங்கள்!

சியோமியின் இந்த புதிய 32-இன்ச் டிவியானது, Realme, OnePlus, VU போன்ற நிறுவனங்களின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.

ஏனெனில் புதிய Xiaomi Smart TV 5A Pro மாடல் ஆனது HD பேனல், ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான PatchWall 4 யுஐ, 24W ஸ்பீக்கர்ஸ் போன்ற அம்சங்களை, நம்ப முடியாத பட்ஜெட் பிரிவிற்குள் 'பேக்' செய்கிறது!

Xiaomi Smart TV 5A Pro-வின் டிஸ்பிளே.. வேற மாறி.. வேற மாறி..!

Xiaomi Smart TV 5A Pro-வின் டிஸ்பிளே.. வேற மாறி.. வேற மாறி..!

சியோமியின் இந்த லேட்டஸ்ட் 5A Pro டிவி மாடல் ஆனது 1366 x 768 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 178° வியூவிங் ஆங்கிள், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 85% NTSC கலர் கேமட், 92% DCI-P3 போன்றவைகளை கொண்ட 32-இன்ச் அளவிலான HD டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

மேலும் இதில் உள்ள விவிட் பிக்சர் எஞ்சின் ஆனது ஒவ்வொரு காட்சிக்கும் கூடுதல் கலர், காண்ட்ராஸ்ட் மற்றும் டெப்த்-ஐ சேர்க்கிறது. குறையாக சொல்லும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த டிவிக்கான வால் மவுண்ட் பாக்ஸ் உடன் வராது!

வாங்குனா இப்படி ஒரு TV-ஐ வாங்கணும்! இல்லனா Phone-லயே படம் பாத்துக்கணும்!வாங்குனா இப்படி ஒரு TV-ஐ வாங்கணும்! இல்லனா Phone-லயே படம் பாத்துக்கணும்!

தாறுமாறான சவுண்ட்.. தரமான யூஸர் இன்டர்பேஸ்!

தாறுமாறான சவுண்ட்.. தரமான யூஸர் இன்டர்பேஸ்!

இந்த டிவி மொத்தம் 24W ஆடியோ அவுட்புட்டை வழங்கும் டூயல்-ஸ்பீக்கர் சிஸ்டம் உடன் வருகிறது. மேலும் இது Dolby Audio, DTS:X மற்றும் DTS Virtual: X ஆகியவற்றிற்கான ஆதரவையும் கொண்துள்ளது.

சாப்ட்வேரை பொறுத்தவரை, இது Android 11 TV OS அடிப்படையிலான Xiaomi நிறுவனத்தின் சொந்த PatchWall 4 UI உடன் வருகிறது, இது IMDb இன்டக்ரேஷன், யுனிவர்சல் சேர்ச், 300+ லைவ் சேனல்கள், 'பேரண்ட் லாக்' உடனான கிட்ஸ் மோட் மற்றும் 'யூசர் சென்டர்' போன்ற அம்சங்களை கொண்டு வருகிறது.

போதும்.. போதும்னு ஸ்டோரேஜ், கனெக்டிவிட்டி!

போதும்.. போதும்னு ஸ்டோரேஜ், கனெக்டிவிட்டி!

ALLM (ஆட்டோ லோ லேட்டன்சி மோட்) மற்றும் ARC (Dolby Atmos Pass-through) ஆகியவற்றுடன் இந்த ஸ்மார்ட் டிவியானது, குவாட் கோர் கார்டெக்ஸ் A55 CPU மற்றும் GPU உடனான Mali G31 MP2 உடன் வருகிறது. மேலும் இது 1.5 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 8 ஜிபி அளவிலான ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, இது ப்ளூடூத் 5.0 மற்றும் டூயல்-பேண்ட் வைஃபை 2.4GHz / 5GHz வைஃபை 802.11 a/b/g/n/ac (2×2 MIMO) உள்ளது.

தவிர குரோம்காஸ்ட் பில்ட்-இன், கூகுள் ப்ளே ஸ்டோர், கூகுள் அசிஸ்டென்ட், இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், ஈதர்நெட் போர்ட், ஒரு ஏவி மற்றும் ஒரு 3.5 மிமீ ஜாக் போன்றவைகளும் உள்ளன.

ஒரே நாளில் 11 டிவிகளின் விலைகளை நிரந்தரமாக குறைத்த Xiaomi! இதோ முழு லிஸ்ட்!ஒரே நாளில் 11 டிவிகளின் விலைகளை நிரந்தரமாக குறைத்த Xiaomi! இதோ முழு லிஸ்ட்!

Xiaomi Smart TV 5A Pro விலை மற்றும் விற்பனை:

Xiaomi Smart TV 5A Pro விலை மற்றும் விற்பனை:

இந்தியாவில் Xiaomi Smart TV 5A Pro 32-inch மாடல் ஆனது ரூ.16,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது கூடிய விரைவில் Mi.com, Amazon, Flipkart மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் விற்பனைக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
New 32-inch Smart TV 2022 Xiaomi Launched Latest Budget TV in India Under Rs.18000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X