மைக்ரோசாப்ட் ஹோலோலென்ஸ் 2 அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இரண்டாம் ஜெனெரேஷன் ரியாலிட்டி ஹெட்செட் மாடலான, புதிய ஹோலோலென்ஸ் 2 மாடலை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இரண்டாம் ஜெனெரேஷன் ரியாலிட்டி ஹெட்செட் மாடலான, புதிய ஹோலோலென்ஸ் 2 மாடலை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.
மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளாள் ஹோலோலென்ஸ் 2 பற்றிய டீஸர் வீடியோவை மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு முன்பு யூடியூபில் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோலோலென்ஸ் 2
ஹோலோலென்ஸ் முதல் ஜெனெரேஷன் ஹெட்செட்டின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது பல புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய சேவைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பிரத்தியேகமான புதிய வடிவத்துடன் ஹோலோலென்ஸ் 2 மாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

டிஸ்பிளே சேவை
ஹோலோலென்ஸ் 2 சிறந்த டிஸ்பிளே தரத்துடன் கூடிய அட்டகாசமான கெஸ்ட்சர் கண்ட்ரோல் சேவையை வழங்கியுள்ளது. ஹோலோலென்ஸ் 2 ஹெட்செட் 47 பிக்சல் டிகிரி அடர்த்தி கொண்ட 52 டிகிரி காட்சி சேவையை வழங்குகிறது.

ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
2K க்கு நிகரான டிஸ்பிளே சேவையை மைக்ரோ எலெக்ட்ரோ மெக்கானிக்கல் முறைப்படி பயனருக்கு வழங்கியுள்ளது. ஹோலோலென்ஸ் 2 ஹெட்செட் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடன் கூடிய 8 மெகா பிக்சல் கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐரிஸ் ஸ்கேனர்
ஹோலோலென்ஸ் 2 ஹெட்செட்டில் ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது, இதனை பயன்படுத்தி பயனர் எளிதில் லாகின் செய்துகொள்ளும் வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.

விலை
ஹோலோலென்ஸ் 2 ஹெட்செட் வாய்ஸ் கமெண்ட் மற்றும் ஐ- டிராக்கிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மதிப்பின்படி தன விலை வெறும் ரூ.2,48,412 என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications