Motorola ஸ்மார்ட் டிவி நாளை அறிமுகம்.! நேரலையை பிளிப்கார்ட்டில் பார்க்கலாம்.!

|

மோட்டோரோலா நிறுவனம் அக்டோபர் 9 ஆம் தேதி இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவிகளை வெளியிடத் தயாராக உள்ளது என்று அறிவித்துள்ளது. மோட்டோரோலா பிராண்ட் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களின் விற்பனைக்காக பிளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. வெளியீட்டு நிகழ்வு டிஜிட்டல் முறையில் நிகழ்கிறது. இந்நிகழ்ச்சி பிளிப்கார்ட்டின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி

புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகள், சமீபத்திய குவாட் கோர் மீடியாடெக் MT9602 பிராசஸர் மூலம் இயக்கப்படும் என்று மீடியாடெக் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. இதில் ஆர்ம் கார்டெக்ஸ்-A53 சிபியு 1.5 ஜிஹெர்ட்ஸ் மற்றும் ஆர்ம் மாலி-G52MC1 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மோட்டோரோலா தற்போது 32' இன்ச், 43' இன்ச், 50' இன்ச், 55' இன்ச், 65' இன்ச் மற்றும் 75' இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை சந்தையில் களமிறக்கியுள்ளது.

புதுமையான MT9602 சிப்செட்

மீடியா டெக்கின் புதுமையான MT9602 சிப்செட் உடன் இயங்கும் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஸ்மார்ட் டிவி மூலம், இந்திய நுகர்வோர் 4K மற்றும் HD / FHD தரத்தில் உயர்ந்த வீடியோ மற்றும் ஆடியோ அனுபவத்தை அனுபவிக்க முடியும் என்று பிளிப்கார்ட் தனியார் பிராண்டுகளின் துணைத் தலைவர் தேவ் ஐயர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

எச்டி, ஃபுல் எச்டி மற்றும் 4K டிவி

புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகளில் எச்டி, ஃபுல் எச்டி மற்றும் 4K டிவி மாடல்கள் இருக்கும் என்பதை பிளிப்கார்ட் துணை தலைவரின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிகள் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தால் இயங்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் டிவிகள் என்று கூறப்பட்டுள்ளது. மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகளில் AI அடிப்படையிலான AI-PQ (பட தரம்) மற்றும் AI-AQ (ஆடியோ தரம்) சேவை கொடுக்கப்பட்டுள்ளது.

AI-PQ மற்றும் AI-AQ தொழில்நுட்பம்

மீடியா டெக்கின் புதிய சிப், இந்த நிகழ்நேர வீடியோ தேர்வுமுறை மூலம் சிறந்த படம் மற்றும் ஆடியோ-வீடியோ தரத்தை வழங்க AI-PQ மற்றும் AI-AQ தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட் டிவி இன்பில்ட் AI குரல் தொழில்நுட்ப ஆதரவையும் கொண்டுள்ளது, இது வாய்ஸ் அசிட்டேன்ட அனுபவத்தையும் சிறந்த முறையில் வழங்குகிறது.

HDR 10+

இந்த ஸ்மார்ட் டிவி மூன்று HDMI 2.1a போர்ட், USB 2.0 ஆதரவு மற்றும் HDCP 2.2 உடன் HDMI 2.0 / 1.4 ஆகியவற்றுடன் வருகிறது. இது டால்பி அட்மோஸ் சரவுண்ட் ஆதரவையும் கொண்டுள்ளது. சிறந்த காட்சி அனுபவத்திற்கு, இது HDR 10+ இன் விருப்பங்களை உள்ளடக்கிய அனைத்து அடிப்படை HDR தர ஆதரவைக் கொண்டுள்ளது. வீடியோ ஸ்ட்ரீமிங்கிற்கான ஏ.வி 1 மற்றும் ஏ.வி.எஸ் 2 போன்ற codec தரநிலை ஆதரவையும் இந்த டிவி கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Smart TVs to Launch in India on October 9 on Flipkart : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X