இந்தியா: செப்டம்பர் 16: மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!
சியோமி, சாம்சங், எல்ஜி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இந்திய சந்தையில் அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மொபைல் போன்களை மட்டுமே அதிகளவில் விற்பனை செய்து வந்த மோட்டோரோலா நிறுவனம் தற்போது ஸ்மார்ட் டிவி சந்தையில் களமிறங்கி உள்ளது.

செப்டம்பர் 16
அதன்படி வரும் செப்டம்பர் 16-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் தனது புதிய முதல் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு சவுண்ட்பார்
மேலும் மோட்டோரோலா அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் டிவி ஆனது பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு மோட்டோரோலா ஸ்மார்ட் டிவியில் ஒரு ஹோம் தியேட்டர் போன்ற அனுபவத்தை அளிக்க, கீழே ஒரு சவுண்ட்பார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி பற்றிய கூடுதல் தகவல்கள் அடுத்த திங்கட்கிழமை நிகழ்வில் தெரியவரும்.

மோட்டோ இ6 பிளஸ்
மோட்டோரோலா நிறுவனம் அன்மையில் நடைபெற்ற யுவ IFA 2019 நிகழ்வில் தனது மோட்டோ இ6 பிளஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது, இந்த சாதனம் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு
கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ இ6 பிளஸ் டிஸ்பிளே
மோட்டோ இ6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.1-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1560 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 திரைவிகிதம் அடிப்படையைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தலான சிப்செட் வசதி
மோட்டோ இ6 பிளஸ் சாதனம் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 2ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இவற்றுள் அடக்கம்.

எதிர்பார்க்கப்பட்ட கேமரா
இந்த மோட்டோ இ6 பிளஸ் சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் +2எம்ப டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications