Home
Gadgets

மிரட்டலான மோட்டோரோலா ஸ்மார்ட்டிவி வெறும் ரூ.13,999! எங்க வாங்கலாம்?

ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும், தற்பொழுது ஸ்மார்ட்போன் தயாரிப்புடன் சேர்த்து ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் களமிறங்கி வருகிறது. அந்த வரிசையில் லெனோவா நிறுவனத்தின் பிராண்டான மோட்டோரோலா நிறுவனம் தற்பொழுது புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.13,999 முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி

ரூ.13,999 முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி

ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கக்கூடிய முதல் ஸ்மார்ட் டிவி மாடலை, மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகள் இந்தியச் சந்தையில் சுமார் ரூ.13,999 முதல் ரூ.64,999 என்ற விலையில், 6 வெவ்வேறு டிஸ்பிளே அளவு கொண்ட டிவிகளாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள மோட்டோ

தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள மோட்டோ

மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கென இந்தியச் சந்தையில் எப்படி தனக்கென ஒரு தனி இடத்தை மோட்டோரோலா பிடித்துள்ளதோ, அதேபோல் தற்பொழுது மோட்டோரோலா அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவிகளும் தனக்கென்ற ஒரு தனி இடத்தை இந்திய சந்தையில் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவியின் சிறப்பு

புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவியின் சிறப்பு

இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி மாடல்கள், 32' இன்ச் முதல் 65' இன்ச் வரையிலான மாடல்களாக 4K தரத்தில், கூடுதல் ஸ்மார்ட் சேவைகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளத்தில், HDR டால்பி விஷன் தொழில்நுட்பத்துடன், டால்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ். சேவையுடன் களமிறக்கப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட்  பிக் பில்லியன் டே சேல்ஸ்

ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல்ஸ்

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் 'பிக் பில்லியன் டே சேல்ஸ்' விற்பனை செப்டம்பர் 29ம் தேதி முதல் துவங்குகிறது. இந்த பிக் பில்லியன் டே சேல்ஸ் விற்பனையின் போது மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகளை பிளிப்கார்ட் பயனர்கள் சலுகை விலையில் வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவியின் விலை விபரம்

புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவியின் விலை விபரம்

  • 32' இன்ச் மோட்டோரோலா எச்டி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.13,999
  • 43' இன்ச் மோட்டோரோலா முழு-எச்டி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.24,999
  • 43' இன்ச் மோட்டோரோலா அல்ட்ரா-எச்டி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.29,999
  • 50' இன்ச் மோட்டோரோலா அல்ட்ரா-எச்டி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.33,999
  • 55' இன்ச் மோட்டோரோலா அல்ட்ரா-எச்டி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.39,999
  • 65' இன்ச் மோட்டோரோலா அல்ட்ரா-எச்டி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.64,999

Best Mobiles in India

English summary
Motorola Smart TV is just Rs. 13,999! Where to buy : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X