அடேங்கப்பா இவ்வளவு கம்மி விலையா? Motorola அறிமுகம் செய்த 4கே ஸ்மார்ட் டிவிகள்.!

|

மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதில் தற்போது அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும்.

Motorola Revou2 சீரிஸ்

Motorola Revou2 சீரிஸ்

இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் Motorola Revou2 சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் 32-இன்ச், 40-இன்ச்,43-இன்ச் ஆகிய ஸ்கிரீன் அளவுகளில் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும்விவரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் இதுதான்- ஐபோன் இல்ல., அவரே இதைதான் யூஸ் பண்றாரு!கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் இதுதான்- ஐபோன் இல்ல., அவரே இதைதான் யூஸ் பண்றாரு!

 விலை மற்றும் விற்பனை

விலை மற்றும் விற்பனை

 • 32-இன்ச் கொண்ட மோட்டோரோலா Revou2 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.
 • 40-இன்ச் கொண்ட மோட்டோரோலா Revou2 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.16,999- ஆக உள்ளது.
 • 43-இன்ச் கொண்ட மோட்டோரோலா Revou2 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.
 • 43-இன்ச் மற்றும் 4கே ஆதரவு கொண்ட மோட்டோரோலா Revou2 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.
 • இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகள் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் Flipkart Big Billion Days sale எனும்சிறப்பு விற்பனையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ரெடியா., இந்தியாவில் ஹைப்பர்லூப்- விமான வேகம் பயணம்: சென்னை ஐஐடி உடன் கூட்டு சேர்ந்த இந்தியன் ரயில்வே!ரெடியா., இந்தியாவில் ஹைப்பர்லூப்- விமான வேகம் பயணம்: சென்னை ஐஐடி உடன் கூட்டு சேர்ந்த இந்தியன் ரயில்வே!

  தரமான பிராசஸர்

  தரமான பிராசஸர்

  இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நான்கு ஸ்மார்ட் டிவிகளும் குவாட்-கோர் மீடியாடெக் பிராசஸர் உடன் Mali G52 MP2 GPU ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கம்மி விலையில் தரமான பிராசஸர் உடன் வெளிவந்துள்ளன இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

  உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!

  அட்டகாசமான ஆடியோ

  அட்டகாசமான ஆடியோ

  32-இன்ச், 40-இன்ச்,43-இன்ச் மோட்டோரோலா Revou2 ஸ்மார்ட் டிவிகள் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்களுடன் வெளிவந்துள்ளன. ஆனால் 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி மட்டும் Dolby Atoms-ஐ ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாகஇந்த ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

  இவ்வளவு தான் வாழ்க்கை- ஒரே ஒரு புகைப்படத்தில் மொத்த வாழ்க்கை தத்துவம்: ஆனந்த் மஹிந்திரா டுவீட் வைரல்!இவ்வளவு தான் வாழ்க்கை- ஒரே ஒரு புகைப்படத்தில் மொத்த வாழ்க்கை தத்துவம்: ஆனந்த் மஹிந்திரா டுவீட் வைரல்!

  டிஸ்பிளே அம்சங்கள்

  டிஸ்பிளே அம்சங்கள்

  மோட்டோரோலா நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது எச்டி ரெடி டிஸ்பிளே உடன் 178-degree viewning angle மற்றும் 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் 40-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ஃபுல் எச்டி டிஸ்பிளே ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளன.

  மேலும் 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி விஷன், எம்இஎம்சி, ALLM, எச்டிஆர் 10 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  நார்மல் ரீசார்ஜை விட இது பெஸ்ட் போலயே.. OTT நன்மையுடன் கிடைக்கும் பெஸ்ட் Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள்..நார்மல் ரீசார்ஜை விட இது பெஸ்ட் போலயே.. OTT நன்மையுடன் கிடைக்கும் பெஸ்ட் Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள்..

  ஸ்டோரேஜ் வசதி

  ஸ்டோரேஜ் வசதி

  43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளது. மற்ற அனைத்து ஸ்மார்ட் டிவிகளும் 1ஜிபி ரேம் ஆதரவுடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

  வாட்ஸஅப் புது அம்சம்: இனி ஸ்டேட்டஸ் வைக்கும் போது அதையும் இணைக்கலாம்- அமோக வரவேற்பு!வாட்ஸஅப் புது அம்சம்: இனி ஸ்டேட்டஸ் வைக்கும் போது அதையும் இணைக்கலாம்- அமோக வரவேற்பு!

  கனெக்டிவிட்டி

  கனெக்டிவிட்டி

  3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், ஈத்தர்நெட் போர்ட், ப்ளூடூத், வைஃபை 802.11 ஏசி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகள். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Motorola Revou2 Smart TVs Launched in India: Starting price is Rs.10,999: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X