புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.! ஆரம்ப விலை ரூ.13,999-மட்டுமே.!
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் அட்டகாசமான மோட்டோ ரெவோ 2 சீரிஸ் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளன. குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா டிவிகள் வெவ்வேறு அளவுகள், டிஸ்ப்ளே ரெசல்யூஷனில் ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கின்றன.

அதாவது 32-இன்ச், 40-இன்ச், 43-இன்ச்,50-இன்ச், 55-இன்ச் டிவி மாடல்களை தற்போது மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்தமோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் அம்சங்கள்
இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது எச்டி ரெடி டிஸ்பிளே வசதி மற்றும் 1366x768 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. பின்பு இதன் 40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1920x1080 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் டிவிகள் 4கே டிஸ்பிளே வசதி மற்றும் 3840x2160 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. அதேபோல் மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் டிவி மாடல்களில் மிகவும் எதிர்பார்த்த குவாட்-கோர் மீடியாடெக் பிராசஸர் வசதிஉள்ளது.

அதேபோல் இந்த டிவி மாடல்கள் மாலி G31 MP2 GPU (HD மற்றும் FHD), மாலி G52 MP2 GPU (4K) ஆதரவுகளை கொண்டுள்ளன. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தி உள்ளன அந்நிறுவனம்.

இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள எச்டி மற்றும் ஃபுல் எச்டி டிவிகள் டால்பி ஆடியோ வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளன. பின்பு இந்நிறுவனத்தின் 4கே ஸ்மார்ட் டிவிகள் டால்பி அட்மோஸ் வசதியை கொண்டு வெளிவந்துள்ளன. அதேபோல் இந்த மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் டிவி மாடல்கள் 24W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளன.

குறிப்பாக மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு டி.வி. 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளன. மேலும் இந்தபுதிய டிவி மாடல்களில் சற்றே வித்தியாசமான V வடிவ ஸ்டாண்ட் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் வைபை 802.11 ac (2.4GHz), ப்ளூடூத் Bluetooth, (HD மற்றும் FHD) / 3 (4K) x HDMI போர்ட்கள், 2x USB 2.0, ஈத்தர்நெட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள்.

மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் விலை
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 32-இன்ச் எச்டி ரெடி டிவியின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 40 இன்ச் ஃபுல் எச்டி டிவியின் விலை ரூ.20,990-ஆக உள்ளது.
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி டிவியின் விலை ரூ.23,990-ஆக உள்ளது.
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 43 இன்ச் 4கே டிவியின் விலை ரூ.26,999-ஆக உள்ளது.
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 50 இன்ச் 4கே டிவியின் விலை ரூ.31,990-ஆக உள்ளது.
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 55 இன்ச் 4கே டிவியின் விலை ரூ.37,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications