பொங்கலுக்கு ஆர்டர் பறக்குது.. ஆஃபரில் Motorola 5ஜி டேப்லெட்.. 7040mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது மோட்டோரோலா பேட் 60 நியோ 5ஜி (Motorola Pad 60 Neo 5G) டேப்லெட் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது 2.5கே டிஸ்பிளே, டால்பி அட்மாஸ், குவாட் ஸ்பிக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா பேட் 60 நியோ 5ஜி (Wi-Fi+5G) டேப்லெட் மாடலுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டேப்லெட் மாடலை ரூ.17499 விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா பேட் 60 நியோ 5ஜி அம்சங்கள் (Motorola Pad 60 Neo 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி (MediaTek Dimensity 6300 5G) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல். அதேபோல் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் மோட்டோரோலா பேட் 60 நியோ 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய மோட்டோரோலா டேப்லெட் மாடலில் உள்ளது.
குறிப்பாக 11-இன்ச் 2.5கே டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா பேட் 60 நியோ 5ஜி மாடல் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பிரைட்னஸ், 2560 x 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
தனித்துவமான டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் அதாவது நான்கு ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே இந்த டேப்லெட் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு பல ஆடியோ அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. பின்பு 3.5எம்எம் ஆடியோ ஜாக் வசதியும் இந்த சாதனத்தில் உள்ளது.
8எம்பி ரியர் கேமரா உடன் வெளிவந்துள்ளது மோட்டோரோலா பேட் 60 நியோ 5ஜி மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. பின்பு பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த புதிய டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே மோட்டோரோலா பேட் 60 நியோ 5ஜி மாடல் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
குறிப்பாக IP52 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) ஆதரவுடன் மோட்டோரோலா பேட் 60 நியோ 5ஜி மாடல் வெளிவந்துள்ளது. 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி,ப்ளூடூத் 5.2, கலிலியோ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உளளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரகள் இந்த சாதனத்தில் உள்ளன.
மேலும் இந்த மோட்டோரோலா பேட் 60 நியோ 5ஜி மாடல் 7040mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20W சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 68W இன் பாக்ஸ் சார்ஜர் ஆதரவும் உள்ளது.


Click it and Unblock the Notifications








