Motorola அறிமுகம் செய்த 3-இன்-1 Motorola Tech3 TriX சாதனம்.! உலகத்தில் இது மட்டும் தான் இப்படி.!
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் இது வரை இல்லாதா ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்துகிறது. Motorola Tech3 TriX என்ற புதிய சாதனத்தை நிறுவனம் இப்பொழுது 3 இன் 1 வயர்டு மற்றும் வயர்லெஸ் இயர்போன் மற்றும் ட்ரூலி வயர்லெஸ் மாடலாக அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோரோலா டெக் 3 சாதனம், வர்வ் லைஃப் பயன்பாட்டுடன் ஹப்பிள் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் உள்ளமைக்கப்பட்ட அமேசான் அலெக்சா சேவையுடன் வருகிறது. இது பயனர்களுக்கு இசை, ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்துதல், மேனேஜ் காலெண்டர், வானிலை அப்டேட் மற்றும் பல்லாயிரக்கணக்கான அலெக்சாவின் பிற அம்சங்களைப் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மோட்டோரோலாவின் கூற்றுப்படி, சாதனம் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட இருப்பிடத்தின் இடத்தை வைத்து மேப்ஸ் உதவியின் மூலம் இழந்த காதணியைக் கண்டுபிடிக்க அலெக்சா அனுமதிக்கிறது. இந்த இயர்போன்ஸ் சாதனத்தின் சிறப்பே இதில் உள்ள டெக் 3 அம்சம் தான்.

இது இயர்பட்ஸ்கள் காதில் செருகப்படும்போது ஆட்டோமேட்டிக்காக ஆன் ஆகிறது. அதேபோல், காதிலிருந்து அகற்றும்போது ஆஃப் செய்யப்படுகிறது.

இது அலெக்சா மட்டுமல்லாமல், ஆப்பிள் நிறுவனத்தின் சிரி மற்றும் கூகிள் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பிற இணக்கமான பயன்பாடுகளையும் வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இயக்க அனுமதிக்கிறது. புதிய மோட்டோரோலா இயர்போன்கள் IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உடன் வருகிறது.

மோட்டோரோலா Tech3 சாதனத்தை பயனர்கள் ட்ரூலி வயர்லெஸ் சாதனமாகவும், ஸ்போர்ட் லூப் சாதனமாகவும் மற்றும் "டைரக்ட் பிளக் இன்" ஆடியோ ஜாக் தீர்வை ஆதரிக்கும் உலகின் முதல் உண்மையான வயர்டு மற்றும் வயர்லெஸ் ஹெட்ஃபோன் சாதனம் இதுவாகும் என்று மோட்டோரோலா நிறுவனம் பெருமையுடன் கூறியுள்ளது. இது அக்டோபர் 16 முதல் பிளிப்கார்ட்டில் ரூ .5999 என்ற சிறப்பு விலையில் சலுகையுடன் கிடைக்கும். இதன் அசல் விலை ரூ .9,999 ஆகும்.


Click it and Unblock the Notifications