Home
Gadgets

பாதிக்கு பாதி விலையில் 43 இன்ச் டிவி.. கூகுள் டிவி OS.. 8ஜிபி மெமரி.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் பிரபலமான மோட்டோரோலா நிறுவனத்தின் 43-இன்ச் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கூகுள் டிவி ஓஎஸ், மீடியாடெக் பிராசஸர், 8ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த 43-இன்ச் டிவி வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (43FHDGDMBSXP) மாடலுக்கு 52 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவி ரூ.37,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் ரூ.17,499 விலையில் வாங்க முடியும்.

பாதிக்கு பாதி விலையில் 43 இன்ச் டிவி.. 8ஜிபி மெமரி.. எந்த மாடல்?

இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. இப்போது மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவியின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள்: ஃபுல் எச்டி டிஸ்பிளே, 1920 x 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த டிவி. குறிப்பாக பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் இருக்கும்.

பாதிக்கு பாதி விலையில் 43 இன்ச் டிவி.. 8ஜிபி மெமரி.. எந்த மாடல்?

அதேபோல் இந்த டிவியில் எச்டிஆர் (HDR10) ஆதரவு, 16.7 மில்லயன் கலர்ஸ், 7 பிக்சர் மோட் ( 7 picture modes) மற்றும் கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளே இருப்பதால் ஒரு மினி தியேட்டர் அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டிவியின வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

மீடியாடெக் 9602 (ஏ53 குவாட் கோர்) பிராசஸர் வசதியுடன் இந்த அசத்தலான 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் மாலி ஜி31 எம்பி2 (Mali G31 MP2) கிராஃபிக் பிராசஸர் வசதி இந்த டிவியில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.

கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே இந்த டிவியில் அனைத்து புதிய அம்சங்களையும் பயன்படுத்த முடியும். அதேபோல் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

பாதிக்கு பாதி விலையில் 43 இன்ச் டிவி.. 8ஜிபி மெமரி.. எந்த மாடல்?

குறிப்பாக வாய்ஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டுள்ளது 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் டிவி. மேலும் டால்பி டிஜிட்டல் மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புளூடூத், வைஃபை, லேன், யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஆர்எப், ஆப்டிக்கல் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி. குறிப்பாக கம்மி விலையில் மேம்பட்ட அம்சங்கள் இந்த டிவியில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
MOTOROLA EnvisionX Smart Google TV is available at 37 percent off on flipkart: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X