அரளுது Flipkart.. 55" | 65" இன்ச் Smart TV மீது அதிரடி சலுகை.. QLED அல்ட்ரா எச்டி 4K டிவி வாங்க சரியான நேரம்..
உங்கள் வீட்டின் ஹாலை அழகுபடுத்த ஒரு பெரிய சைஸ் ஸ்மார்ட் டிவி வாங்க திட்டமிடுகிறீர்களா? அப்படியினால், உங்கள் காட்டில் மழை தான் பாஸ். மோட்டோரோலா அறிமுகம் செய்த புதிய QLED அல்ட்ரா எச்டி 4K டிவி மீது அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒரு கலக்கலான ஸ்மார்ட்டிவி மாடல் தான் இந்த மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 55" இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA EnvisionX 55 inch QLED Ultra HD 4K Smart Google TV ) சாதனம். இந்த மாடலை சுருக்கமாக மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 55" இன்ச் QLED ஸ்மார்ட் டிவி என்றே குறிப்பிடலாம்.

மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 55" மற்றும் 65" இன்ச் ஸ்மார்ட் டிவி (MOTOROLA EnvisionX 55 and 64 inch Smart TV):
இது 55UHDGQMWS5Q என்ற மாடல் எண்ணுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் மோட்டோரோலா நிறுவனத்திடம் இருந்து வெளிவந்துள்ள பிரீமியம் ஸ்மார்ட் டிவி மாடலாகும். மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் (MOTOROLA EnvisionX) என்ற சீரிஸ் கீழ் நிறுவனம் இப்போது 55" இன்ச் மற்றும் 65" இன்ச் என்று இரண்டு டிஸ்பிளே அளவு மாடலை விற்பனை செய்து வருகிறது.
இந்த இரண்டு மாடல்கள் மீதும் இப்போது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக தள்ளுபடி கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்டிவிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. பிரீமியம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஸ்மார்ட்டிவி மாடல்கள் இப்போது பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கிறது. ஆகையால், இந்த சலுகையை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். சரி, இப்போது இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலை விபரங்களை பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட் டிவியின் 55" இன்ச் டிஸ்பிளே மாடல் மீது 38% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை ரூ. 59,990 என்ற அசல் விலையுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த மாடல் இப்போது வெறும் ரூ. 36,999 என்ற சலுகைக்கு விலையில் வாங்க கிடைக்கிறது. இதேபோல், 65" இன்ச் டிஸ்பிளே மாடல் மீது 35% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Smart TVகளின் விலை என்ன?
இதனால், ரூ. 70,290 என்ற அசல் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஸ்மார்ட் டிவி இப்போது வெறும் ரூ. 44,999 என்ற மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகை ஒரு குறுகிய கால சலுகை போல் தெரிகிறது. அல்லது இருக்கும் ஸ்டாக் தீரும் வரை இந்த சலுகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவி அம்சங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
இந்த ஸ்மார்ட் டிவி 6 வீடியோ மோட் உடன் வருகிறது. இந்த டிவி கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளேவை வழங்குகிறது. இது 1.07 பில்லியன் துடிப்பான வண்ணங்களைக் கொண்டுள்ளது. இது உங்கள் வீடியோ அனுபவத்தை மேம்படுத்துகிறது. இது பரந்த 178 டிகிரி கோணத்துடன் பார்வை அளவை வழங்குகிறது. இது மீடியாடெக் பிராசஸர் உடன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் மெமரியை ஆதரிக்கிறது.
டால்பி தொழில்நுட்பத்தால் இயங்கும் சத்தமான மற்றும் தெளிவான ஆடியோவுடன் உங்கள் டிவி நேரத்தை அனுபவித்து மகிழ இந்த ஸ்மார்ட் டிவி அனுமதிக்கிறது. இதில் 20W ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்தவையாக வெளிவருகிறது. 4 சவுண்ட் மோட் மற்றும் 3D ஆடியோவுடன் சேர்ந்து சிறப்பாக இயங்குகிறது. இதில் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் ஆதரவும் உள்ளது.


Click it and Unblock the Notifications