Home
Gadgets

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. பெசல் டிசைன்.. கூகுள் டிவி OS.. ஆஃபரில் Motorola 4கே டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா 4கே ஸ்மார்ட் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதுவும் இந்த டிவி கூகுள் டிவி ஓஎஸ், டால்பி ஆடியோ, பெசல் லெஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 43UHDGDMBSXP மாடல் நம்பர் கொண்ட மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Motorola EnvisionX 43 inch 4K Smart Google TV) மாடலுக்கு 59 சதவீதம் தள்ளுபடி ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.18499 விலையில் வாங்கிவிட முடியும்.

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் Motorola 4கே டிவி..

மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 43 இன்ச் 4கே டிவி அம்சங்கள் (Motorola EnvisionX 43 inch 4K Smart Google TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

பெசல்-லெஸ் டிஸ்பிளே (Bezel-less Display) சப்போர்ட் கொண்டிருக்கிறது இந்த டிவி. 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. எனவே இந்த டிவி சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். மேலும் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் குவாட் கோர் மீடியாடெக் 9602 (Quad Core MediaTek 9602) சிப்செட் மூலம் இயங்குகிறது மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி. பின்பு மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.

அதுவும் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி உடன் இந்த மோட்டோரோலா டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த டிவியில் 6 டிஸ்பிளே மோட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது. மேலும் இந்த டிவியில் பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) பயன்படுத்த முடியும். நெட்பிளிக்ஸ், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ மற்றும் யூடிபூப் போன்ற இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. வை-பை (Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி உள்ளது.

தரமான டால்பி அட்மாஸ்(Dolby Atmos), டால்பி டிஜிட்டல் (Dolby Digital), டிடிஎஸ் உள்ளிட்ட பல ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் 20W ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

இந்த டிவியில் லேன்(LAN), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), மினி ஏவி போர்ட் (Mini AV Port) மற்றும் ஆப்டிகல் போர்ட் (Optical Port) சப்போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
MOTOROLA EnvisionX 43 inch 4K LED Smart Google TV is available at discounted price on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X