Home
Gadgets

பிளிப்கார்ட் அதிரும்.. கூகுள் டிவி OS.. 8ஜிபி மெமரி.. ஆஃபரில் Motorola டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் Flipkart GOAT Sale 2025 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஜூலை 17-ம் தேதி வரை மட்டுமே இருக்கும். அதுவும் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் மிகவும் எதிர்பார்த்த மோட்டோரோலா 40 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 40 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA EnvisionX 40 inch Full HD LED Smart Google TV) மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.14999 விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் அதிரும்.. ஆஃபரில் Motorola டிவி.. எந்த மாடல்?

மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 40 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Motorola EnvisionX 40 inch Smart Google TV Specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த 40இன்ச் மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

இதுதவிர 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர் (HDR10) ஆதரவு, 16.7 மில்லயன் கலர்ஸ், 7 பிக்சர் மோட் ( 7 picture modes) மற்றும் கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளே இருப்பதால் ஒரு மினி தியேட்டர் அனுபவம் கிடைக்கும். அதேபோல பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியாடெக் 9602 (ஏ53 குவாட் கோர்) பிராசஸர் வசதியுடன் இந்த 40 இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி31 எம்பி2 (Mali G31 MP2) கிராஃபிக் பிராசஸர் வசதி இந்த டிவியில் உள்ளது. கேமிங் பயனர்களுக்கு இந்த
டிவி பயனுள்ள வகையில் இருக்கும்.

கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. ஆகவே இந்த டிவியில் அனைத்து புதிய அம்சங்களையும் பயன்படுத்த முடியும். 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக வாய்ஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டுள்ளது 40 இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் டிவி. மேலும் டால்பி டிஜிட்டல் மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் 40 இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

புளூடூத், வைஃபை, லேன், யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஆர்எப், ஆப்டிக்கல் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 40 இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கும். அதாவது வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் இந்த டிவியில் உள்ளன.

கூகுள் டிவி ஓஎஸ், டால்பி ஆடியோ, 16.7 மில்லயன் கலர்ஸ், மீடியாடெக் பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா டிவி கம்மி விலையில் தற்போது கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola EnvisionX 40 inch Google TV is available discounted price at Flipkart GOAT Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X