இனி வீடே தியேட்டர் தான்.. கூகுள் டிவி 5.0.. டால்பி அட்மாஸ்.. 65 இன்ச் Motorola டிவி அறிமுகம்.. என்ன விலை?
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் கியூஎல்இடி சீரிஸை (Motorola Envision X QLED series) சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சீரிஸ் 43 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் என்ற மூன்று அளவுகளில் வாங்க கிடைக்கும். இப்போது இந்த புதிய டிவிகளின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் கியூஎல்இடி சீரிஸ் அம்சங்கள் (Motorola Envision X QLED series Specifications): தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 43 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் கியூஎல்இடி 4கே ரெசல்யூஷன் (4K resolution) கொண்ட டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் கியூஎல்இடி பேக்லைட் டிஸ்பிளே டெக்னாலஜி (QLED backlight display technology) ஆதரவுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்டுள்ளன இந்த டிவிகள்.

எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவுடன் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் கியூஎல்இடி சீரிஸ் வெளிவந்துள்ளன. மேலும் ஆட்டோமேட்டிக் லோ-லேடன்சி மோட் (automatic low-latency mode - ALLM) ஆதரவும் இந்த டிவிகளில் உள்ளன.
சக்திவாய்ந்த குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர் (Quad Core Mediatek Processor) உடன் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் கியூஎல்இடி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
கூகுள் டிவி 5.0 (Google TV 5.0) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த 43 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகளில் குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் போட்டோஸ் (Google Photos), ஹே கூகுள் (Hey Google) போன்ற பல சேவைகளை பயன்படுத்த முடியும்.
அதேபோல் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் ( Hotstar) உள்ளிட்ட பிரபலமான ஓடிடி ஆப்களை இந்த டிவிகளில் பயன்படுத்தலாம்.
டால்பி அட்மோஸ்(Dolby Atmos) சப்போர்ட் கொண்ட 48W ஸ்பீக்கர்கள் உடன் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் கியூஎல்இடி சீரிஸ் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகளில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். அதேபோல் இந்த டிவிகளில் டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத் , வைஃபை, ஆர்எப், ஆப்டிக்கல், லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோரோலா டிவிகளில் உள்ளன. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் இந்த மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் கியூஎல்இடி சீரிஸ் வெளிவந்துள்ளன.
மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் கியூஎல்இடி சீரிஸ் 43 இன்ச் டிவியின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. பின்பு இதன் 55 இன்ச் மாடலை ரூ.30,599 விலையிலும், 65 இன்ச் மாடலை ரூ.41,999 விலையிலும் வாங்க முடியும். தற்போது இந்த டிவிகள் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








