Home
Gadgets

மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: விலை எவ்வளவு? விற்பனை?

அன்மையில் வியூ நிறுவனம் 100-இன்ச் சூப்பர் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது, இந்த 100-இன்ச் டிவி மாடல் இந்த வாரம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனமும் தனது புதிய 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவர தயார் நிலையில் உள்ளது.

 பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தின் வழியே விற்பனைக்குவரும் என்றும், அதன் விலைப்பற்றி தகவல்கள் தற்சமயம் பிளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கும், ரிமோட்-ன் வடிவமைப்புக்கும் அதிககவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4கே ஐபிஎஸ் எல்இடி டிஸ்பிளே

4கே ஐபிஎஸ் எல்இடி டிஸ்பிளே

மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே ஐபிஎஸ் எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு3840 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் 60Hz refresh rate, 178 டிகிரி கோணம், 450 nits brightness, உள்ளிட்ட ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

 டால்பி விஷன் + எச்டிஆர் 10

டால்பி விஷன் + எச்டிஆர் 10

இந்த 75-இன்ச் ஸ்மார்ட்டிவி மாடல் மேம்படுத்தப்பட்ட டால்பி விஷன் + எச்டிஆர் 10 தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது.மேலும் வண்ண செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும். மேலும் 30W பாக்ஸ் ஸ்பீக்கர் உடன் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட்,டால்பி ஆடியோ உள்ளிட்டஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

ஆண்ட்ராய்டு 9பை

ஆண்ட்ராய்டு 9பை

மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 சிபுயு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு1.0ஜிகாஹெர்ட்ஸ் மாலி450 குவாட்-கோர் உள்ளிட்ட மென்பொருள் ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம். பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாககொண்டுள்ளதால் இந்த டிவியை இயக்க சுலபமாக இருக்கும்.

ரிமோட்

ரிமோட்

கூகிள் அசிஸ்டென்ட், பிளே ஸ்டோர் மற்றும் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட பல்வேறுஆப் பயன்படுகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக கூகிள் அசிஸ்டென்ட், நெட்ஃபிக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட ஆப் வசதிகளை இயக்க இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட்-ல் தனியாகவே பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், ஆர்.எஃப் உள்ளீடு, ஆடியோ வெளியீடு, வைஃபை மற்றும் ஆர்.ஜே 45 ஈதர்நெட் போர்ட், போன்ற இணைப்பு ஆதரவுகள், க்ரோம் காஸ்ட் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி.

ரூ.1,19,999- விலை

ரூ.1,19,999- விலை

மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல் ரூ.1,19,999-என்ற விலையில் பிளிப்கார்ட் தளத்தில்விரைவில் விற்பனைக்கு வரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கேம்பேடுடன் இரட்டை ஜாய்ஸ்டிக் வசதியுடன்
இந்த சாதனம் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola announces 75-inch 4K LED Smart Android TV for Rs 1,19,999: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X