குறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வந்தது மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி.!
மோட்டோரோலா நிறுவனத்தின் 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது இந்த வாரம் துவகத்தில் அறிமுகம் செய்ய்பபட்டு, நேற்று பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.1,19,999-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10சதவிகிதம் தள்ளுபடி
மேலும் எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் 10சதவிகிதம் தள்ளுபடி பெறமுடியும்.பின்பு ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த சாதனத்ததை வாங்கினாலும் கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

4கே ஐபிஎஸ் எல்இடி டிஸ்பிளே
மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே ஐபிஎஸ் எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 3840 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் 60Hz refresh rate, 178 டிகிரி கோணம், 450 nits brightness, உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

டால்பி விஷன் + எச்டிஆர் 10
இந்த 75-இன்ச் ஸ்மார்ட்டிவி மாடல் மேம்படுத்தப்பட்ட டால்பி விஷன் + எச்டிஆர் 10 தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. மேலும் வண்ண செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 30W பாக்ஸ் ஸ்பீக்கர் உடன் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட்,டால்பி ஆடியோ உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

ஆண்ட்ராய்டு 9பை
மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 சிபுயு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 1.0ஜிகாஹெர்ட்ஸ் மாலி450 குவாட்-கோர் உள்ளிட்ட மென்பொருள் ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம். பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தைஅடிப்படையாககொண்டுள்ளதால் இந்த டிவியை இயக்க சுலபமாக இருக்கும்.

ரிமோட்
கூகிள் அசிஸ்டென்ட், பிளே ஸ்டோர் மற்றும் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆப் பயன்படுகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக கூகிள் அசிஸ்டென்ட், நெட்ஃபிக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட ஆப் வசதிகளை இயக்க இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட்-ல் தனியாகவே பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்
இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், ஆர்.எஃப் உள்ளீடு, ஆடியோ வெளியீடு, வைஃபைமற்றும் ஆர்.ஜே 45 ஈதர்நெட் போர்ட், போன்ற இணைப்பு ஆதரவுகள், க்ரோம் காஸ்ட் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த
மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி.


Click it and Unblock the Notifications