Home
Gadgets

பழைய டிவிக்கு குட் பை சொல்லுங்க.. 65 இன்ச் டிவிக்கு விலை குறைப்பு.. கூகுள் டிவி OS, 32ஜிபி மெமரி.. எந்த மாடல்?

இந்த 2026-ம் ஆண்டு தொடக்கம் முதல் பல முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவிகள் விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக பெரிய ஸ்மார்ட் டிவிகளை வாங்க நினைக்கும் பயனர்கள் இப்போது வாங்குவது நல்லது. இந்நிலையில் மோட்டோரோலா (MOTOROLA) நிறுவனத்தின் 65 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று விலை குறைப்பில் கிடைக்கிறது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா 65 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.41,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.39999 விலையில் வாங்கிவிட முடியும்.

பழைய டிவிக்கு குட் பை சொல்லுங்க..  65 இன்ச் டிவிக்கு விலை குறைப்பு..

மோட்டோரோலா 65 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 அம்சங்கள் (MOTOROLA 65 inch QLED 4K Smart Google TV 2025 Specifications): 4K டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா டிவி. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 350 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெசல் லெஸ் டிசைன் (Bezel-less) உடன் இந்த வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 1.07 பில்லியன் கலர்ஸ் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். மேலும் மோட்டோரோலா 65 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியை வழங்குகிறது.

சக்திவாய்ந்த மீடியாடெக் குவாட் கோர் AI பிராசஸர் (MediaTek Quad-Core AI Processor) உடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டிவியில் கேமிங் பிரியர்களுக்காக இன்-பில்ட் கிராபிக்ஸ் யூனிட் (In-Built Graphics Unit) வருகிறது.

அதுவும் கூகுள் டிவி 5.0 இயங்குதளத்தை (Google TV OS 5.0) அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா 65 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல். எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும்.

குறிப்பாக யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம். ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.

தரமான டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 48W ஸ்பீக்கர்கள் உடன் இந்த மோட்டோரோலா 65 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு பல்வேறு ஆடியோ மோட்கள் இந்த டிவியில் உள்ளன. அதேபோல் பில்ட் இன் குரோம்காஸ்ட் ஆதரவு மற்றும் ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வருகிறது.

மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத் வி5.0, வைஃபை, ஆர்எப், ஆப்டிக்கல், லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோரோலா 65 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola 65 inch QLED 4K Smart Google TV 2025 price cut on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X