பழைய டிவிக்கு குட்பை..நம்ப முடியாத விலை குறைப்பில் 55 இன்ச் 4K டிவி.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?
மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் 55 இன்ச் டிவி ஒன்று தற்போது விலை குறைப்பில் கிடைக்கிறது. அதுவும் இந்த டிவி 48W ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ். கூகுள் டிவி 5.0 ஓஎஸ், 32ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா 55 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (Motorola 55 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025) மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.30,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது, ஆகவே இந்த டிவியை ரூ.28499 விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா 55 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 அம்சங்கள் (MOTOROLA 55 inch QLED 4K Smart Google TV 2025 Specifications): 4K டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா டிவி. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 350 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெசல் லெஸ் டிசைன் (Bezel-less) உடன் இந்த வெளிவந்துள்ளது.
அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 1.07 பில்லியன் கலர்ஸ் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். மேலும் மோட்டோரோலா 55 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியை வழங்குகிறது.
தரமான குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர் (Quad Core Mediatek Processor) உடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டிவியில் கேமிங் பிரியர்களுக்காக இன்-பில்ட் கிராபிக்ஸ் யூனிட் (In-Built Graphics Unit) வருகிறது.
கூகுள் டிவி 5.0 இயங்குதளத்தை (Google TV OS 5.0) அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா 55 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல். எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும்.
யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம். ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 48W ஸ்பீக்கர்கள் உடன் இந்த மோட்டோரோலா 55 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு பல்வேறு ஆடியோ மோட்கள் இந்த டிவியில் உள்ளன. அதேபோல் பில்ட் இன் குரோம்காஸ்ட் ஆதரவு மற்றும் ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வருகிறது.
குறிப்பாக எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத் வி5.0, வைஃபை, ஆர்எப், ஆப்டிக்கல், லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோரோலா 55 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலில் உள்ளன.


Click it and Unblock the Notifications








