செம்ம டிமாண்ட்.. 56 சதவீத ஆஃபரில் 43 இன்ச் QLED UHD 4K டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனத்தின் கியூஎல்இடி டிவி மாடல்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. இதில் பாதிக்கும் மேல் கம்மியான விலையில் மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA 43 inch QLED Ultra HD 4K Smart Google TV) வாங்க கிடைக்கிறது. கூடுதலாக பேங்க் தள்ளுபடியும் கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 56 சதவீத தள்ளுபடி போக ரூ.21,999 விலைக்கு 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.20,749 விலைக்கு இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம்.

மீடியாடெக் ப்ராசஸர் கொடுத்துள்ளது. கூகுள் டிவி 5.0 ஓஎஸ் கிடைக்கிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட், குரோம்காஸ்ட்-பில்ட் இன், பெசல்-லெஸ் டிஸ்பிளே, 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்ற பட்ஜெட் விலையில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களையும் இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுத்து உள்ளது.
மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி டிவி (MOTOROLA 43 inch QLED TV Specifications): 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன், 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கொடுத்துள்ளது.
மேலும், எச்டிஆர்10 (HDR10) மற்றும் பெசல்-லெஸ் டிஸ்பிளே (Bezel-Less Display) டிசைனை இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுத்துள்ளது. யூசர், ஸ்டான்டர்டு, ஸ்போர்ட்ஸ், விவிட், மூவி, கேம் மற்றும் எனர்ஜி சேவிங் உள்ளிட்ட பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது.
கூகுள் டிவி 5.0 ஓஎஸ் (Googe TV 5.0 OS) கொண்ட மாடலாக இருப்பதால், பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அவுட்புட் கொடுக்க கூடியது. மீடியாடெக் ப்ராசஸர் மற்றும் பில்ட்-இன் கிராபிக்ஸ் யூனிட் கொடுத்துள்ளது.
2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி பேக் செய்துள்ளது. 10000+ ஆப்கள் சப்போர்ட் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), யூடியூப் (YouTube) போன்ற முக்கிய ஓடிடி ஆப்களை கொடுத்துள்ளது.
வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட்டிலும் ஓடிடிக்கு குயிக் அக்சஸ் கிடைக்கிறது. ப்ளூடூத் மற்றும் வை-பை கனெக்டிவிட்டியை இந்த 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுக்கிறது. மேலும், ஹெட்போன் ஜாக் (Headphone Jack), மினி ஏவி (Mini AV), 3 எச்டிஎம்ஐ (HDMI), 2 யுஎஸ்பி (USB) போர்ட்கள் உள்ளன.
மேலும், ஆர்எப் (RF), ஆப்டிகல் (Optical), எல்ஏஎன் (LAN), டிவிபி-எஸ்2 (DVB-S2) ஆகிய கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது. 43UHDGQMWSDQ மாடல் மற்றும் 2025 எடிஷனில் கீழ் இந்த 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி விற்பனைக்கு கிடைக்கிறது. 1 வருட வாரண்டியை கொடுத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications