Home
Gadgets

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி மெமரி.. கூகுள் டிவி OS.. ஆஃபரில் QLED டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் Flipkart SASA LELE Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (MOTOROLA 43 inch QLED Smart Google TV 2025) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 43FHDGQMV7Q மாடல் நம்பர் கொண்ட மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலுக்கு 57 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. எந்த மாடல்?

மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 அம்சங்கள் (MOTOROLA 43 inch QLED Smart Google TV 2025 Specifications): பெசல் லெஸ் டிசைன் (Bezel-less) உடன் இந்த வெளிவந்துள்ளது. அதேபோல் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது இந்த டிவி. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 1.07 பில்லியன் கலர்ஸ் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். மேலும் மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியை வழங்குகிறது.

சக்திவாய்ந்த குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர் (Quad Core Mediatek Processor) உடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டிவியில் கேமிங் பிரியர்களுக்காக இன்-பில்ட் கிராபிக்ஸ் யூனிட் (In-Built Graphics Unit) வருகிறது.

குறிப்பாக கூகுள் டிவி இயங்குதளத்தை (Google TV OS)அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 டிவி. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும்.

மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 40W ஸ்பீக்கர்கள் உடன் இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு பல்வேறு ஆடியோ மோட்கள் இந்த டிவியில் உள்ளன. அதேபோல் பில்ட் இன் குரோம்காஸ்ட் ஆதரவு மற்றும் ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வருகிறது.

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத் வி5.0, வைஃபை, ஆர்எப், ஆப்டிக்கல், லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
MOTOROLA 43 inch QLED Smart Google TV 2025 price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X