அசரவைக்கும் பிளிப்கார்ட்.. ரூ.15,999 பட்ஜெட்ல 4K ஸ்மார்ட் டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (MOTOROLA 43 inch QLED Smart Google TV 2025) மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலுக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.15999 விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 அம்சங்கள் (MOTOROLA 43 inch QLED Smart Google TV 2025 Specifications): பெசல் லெஸ் டிசைன் (Bezel-less) உடன் இந்த வெளிவந்துள்ளது. அதேபோல் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது இந்த டிவி. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 1.07 பில்லியன் கலர்ஸ் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். மேலும் மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியை வழங்குகிறது.
குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர் (Quad Core Mediatek Processor) உடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டிவியில் கேமிங் பிரியர்களுக்காக இன்-பில்ட் கிராபிக்ஸ் யூனிட் (In-Built Graphics Unit) வருகிறது.
கூகுள் டிவி இயங்குதளத்தை (Google TV OS)அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 டிவி. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும்.
மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.
டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 40W ஸ்பீக்கர்கள் உடன் இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு பல்வேறு ஆடியோ மோட்கள் இந்த டிவியில் உள்ளன. அதேபோல் பில்ட் இன் குரோம்காஸ்ட் ஆதரவு மற்றும் ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வருகிறது.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத் வி5.0, வைஃபை, ஆர்எப், ஆப்டிக்கல், லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலில் உள்ளன.


Click it and Unblock the Notifications








