பழைய 32 இன்ச் TV-க்கு கும்பிடு.. 55 சதவீத ஆஃபரில் 43 இன்ச் 4K டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் TV OS.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் பிளிப்கார்ட் கிராண்ட் ஹோம் அப்ளையன்ஸ் சேல் (Flipkart Grand Home Appliances Sale) என்னும் சிறப்பு விற்பனையில் 43 இன்ச் டிவிகள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. இதில் மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே கூகுள் டிவி (MOTOROLA 43 inch QLED 4K Google TV) மாடல் பாதிக்குப்பாதி விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா டிவிக்கு கிடைக்கும் தள்ளுபடியை பார்க்கலாம்.
இப்போது, பிளிப்கார்ட் கிராண்ட் ஹோம் அப்ளையன்ஸ் சேலில் 55 சதவீத தள்ளுபடி போக மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே கூகுள் டிவி 2025 எடிஷன் (MOTOROLA 43 inch QLED 4K Google TV 2025 Edition) மாடல் கிடைக்கிறது. ஆகவே, ரூ.21,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு ரூ.20,499 விலைக்கு வாங்கி கொள்ள கிடைக்கிறது.

இந்த மலிவான விலைக்கு பெசல்-லெஸ் டிஸ்பிளே, டால்பி ஆடியோ (Dolby Audio), குரோம்காஸ்ட் பில்ட்-இன், வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant), மீடியாடெக் ப்ராசஸர் (MediaTek Processor) இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே கூகுள் டிவி 2025 எடிஷன் மாடலுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கூகுள் டிவி ஓஎஸ் 5.0 (Google TV OS 5.0), 30W ஸ்பீக்கர்கள், 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது.
மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே கூகுள் டிவி அம்சங்கள் (MOTOROLA 43 inch QLED 4K Google TV Specifications): 43 இன்ச் ( பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த மோட்டோரோலா டிவி கொண்டுள்ளது. 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கொடுத்து உள்ளது. மேலும், எச்டிஆர்10 (HDR 10) சப்போர்ட் கிடைக்கிறது.
யூசர், ஸ்டான்டர்ட், ஸ்போர்ட், விவிட், மூவி, கேம் மற்றும் எனர்ஜி சேவிங் ஆகிய டிஸ்பிளே மோட்களை இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே கூகுள் டிவி கொடுத்துள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் 5.0 கிடைக்கிறது. ஆகவே, குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) மற்றும் கூகுள் போட்டோஸ் (Google Photos) போன்ற ஆப்கள் கிடைக்கின்றன.
மேலும், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வருகிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே கூகுள் டிவி 2025 எடிஷன் கொடுத்து உள்ளது. பில்ட்-இன் கிராபிக்ஸ் யூனிட் (Built-in Graphics Unit), டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) கொடுக்கப்பட்டு உள்ளது. டிஸ்பிளேவில் ஹைய்யர் பீக் பிரைட்னஸ், டீப்பர் பிளாக் மற்றும் பெட்டர் கான்ட்ராஸ்ட் கிடைக்கிறது.
நெட்பிளிக்ஸ், யூடியூப், ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, சோனிலிவ், ஜீ5 உள்ளிட்ட ஓடிடி ஆப்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. குவாட் கோர் மீடியாடெக் ப்ராசஸர் (Quad Core MediaTek Processor) இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே கூகுள் டிவி 2025 எடிஷன் மாடலுக்கு கிடைக்கிறது. ஹெட்போன் ஜாக் (Headphone Jack), மினி ஏவி (Mini AV) மற்றும் எல்ஏஎன் (LAN) கிடைக்கிறது.
மேலும், 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port) மற்றும் ஆப்டிகல் (Optical) கனெக்டிவிட்டிகளும் கிடைக்கின்றன. ப்ளூடூத் கொண்டுள்ளது. வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கிறது. 43UHDGQMWSDQ மாடலாக இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே கூகுள் டிவி 2025 எடிஷன் விற்பனைக்கு கிடைக்கிறது. 1 வருட வாரண்டி பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








