டிவி வாங்க இதுதான் சரியான நேரம்.. மோட்டோரோலா 43 இன்ச் டிவிக்கு 53 சதவீத தள்ளுபடி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா 43 இன்ச் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 எடிஷன் மாடலுக்கு பிளிப்கார்ட்டில் 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.22,199 விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 அம்சங்கள் (MOTOROLA 43 inch QLED 4K Smart Google TV 2026 Specifications): 4K டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா டிவி. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 350 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெசல் லெஸ் டிசைன் (Bezel-less) உடன் இந்த வெளிவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 1.07 பில்லியன் கலர்ஸ் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். மேலும் மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 மாடல் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியை வழங்குகிறது.
குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர் (Quad Core Mediatek Processor) உடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டிவியில் கேமிங் பிரியர்களுக்காக இன்-பில்ட் கிராபிக்ஸ் யூனிட் (In-Built Graphics Unit) வருகிறது.
கூகுள் டிவி 5.0 இயங்குதளத்தை (Google TV 5.0) அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 மாடல். எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும்.
யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம். ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் உடன் இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு பல்வேறு ஆடியோ மோட்கள் இந்த டிவியில் உள்ளன. அதேபோல் பில்ட் இன் குரோம்காஸ்ட் ஆதரவு மற்றும் ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வருகிறது.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத் வி5.0, வைஃபை, ஆர்எப், ஆப்டிக்கல், லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 மாடலில் உள்ளன


Click it and Unblock the Notifications
