ஆபரில் Motorola 4கே டிவி.. 32ஜிபி மெமரி.. டால்பி அட்மாஸ்.. கூகுள் டிவி ஓஸ்.. எந்த மாடல்?
மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (Motorola 43 inch 4K Smart Google TV 2025 Edition) ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 48W ஸ்பீக்கர்கள், பெசல் லெஸ் டிசைன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் உடன் இந்த மோட்டோரோலா டிவி வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகளைப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் மாடலுக்கு 54 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த மோட்டோரோலா டிவியை ரூ.20499 விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 அம்சங்கள் (Motorola 43 inch 4K Smart Google TV 2025 Edition Specifications): அசத்தலான பெசல் லெஸ் (bezel less) டிசைன் உ டன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த டிவி.
குறிப்பாக இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.07 பில்லியன் கலர்ஸ், டால்பி விஷன், எச்டிஆர் 10, 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவும் இந்த டிவியில் உள்ளன.
தரமான குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர் (Quad Core Mediatek Processor) உடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. அதேபோல் இந்த டிவியில் இன்-பில்ட் கிராபிக்ஸ் யூனிட் (In-Built Graphics Unit) வருகிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.
அதுவும் கூகுள் டிவி ஓஸ் 5.0 (Google TV OS 5.0) மூலம் இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் இயங்குகிறது. ஆகவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும்.
குறிப்பாக யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம். அதேபோல் குரோம் காஸ்ட் பில்ட்-இன் ஆதரவும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 48W ஸ்பீக்கர்கள் மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் டிவியில் உள்ளன. எனவே இந்த டிவியில் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு 7 சவுண்ட் மோட்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத், வைஃபை, ஆர்எப், ஆப்டிக்கல், லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளன.


Click it and Unblock the Notifications








