Home
Gadgets

வீட்டுக்கு 2 டிவி ஆர்டர்.. 62 சதவீத விலை குறைப்பு.. ரூ.8999 க்கு 32 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனத்தின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் மலிவான விலைக்கு நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. மற்ற நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு கியூஎல்இடி டிஸ்பிளே கொண்ட டிவிகளை மோட்டோரோலா அறிமுகம் செய்து வருகிறது. இப்போது, 62 சதவீத டிஸ்கவுண்ட் போக 32 இன்ச் மோட்டோரோலா டிவி வாங்க கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி டிவிக்கு (MOTOROLA 32 inch QLED TV) 62 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் பெற்று ரூ.9,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.8,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

வீட்டுக்கு 2 டிவி ஆர்டர்.. 62 சதவீத விலை குறைப்பு.. ரூ.8999 க்கு டிவி!

மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (MOTOROLA 32 inch QLED TV Specifications): 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த மோட்டோரோலா டிவி கொண்டுள்ளது. 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் எச்டி (HD) ரெசொலூஷன் மற்றும் விவிட் பிக்சர் மோட் (Vivid Picture Mode) கிடைக்கிறது. மேலும், 16.78 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.

பெசல்-லெஸ் டிசைனில் கிடைப்பதால் இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி டிவி பிரீமியம் டிவி லுக் கொடுக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் 5.0 (Google TV OS 5.0) கிடைக்கிறது. ஆகவே, குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast buit-in), ஹே கூகுள் (Hey Google) வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், கூகுள் போட்டோஸ் (Google Photos) சப்போர்ட் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 (Android 14) கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் வாய்ஸ் ரிமோட் (Voice Remote) கிடைக்கிறது. குவாட் கோர் சிப்செட் மற்றும் 1 ஜிபி ரேம் கொண்டுள்ளது. 8 ஜிபி மெமரியை இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுக்கிறது. மோஷன் என்ஹான்ஸ்மெண்ட் (Motion Enhancement) மற்றும் கலர் என்ஹான்ஸ்மெண்ட் (Colour Enhancement) உள்ளது.

8 விசுவல் மோட்களை இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி டிவி கொண்டுள்ளது. ஸ்டான்டர்ட் (Standard), டைனாமிக் (Dynamic), சினிமா (Cinema), ஃபிலிம் மேக்கர் (Film Maker), ஈகோ (Eco), கேம் (Game), யூசர் (User) மற்றும் லோவ் ப்ளூ (Low Blue) ஆகிய பிக்சர் மோட்களில் பயன்படுத்தி கொள்ளலாம். 2 ஸ்பீக்கர்களை இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுக்கிறது.

40 W சவுண்ட் அவுட்புட் கொடுத்துள்ளது. டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் ஆப்டிகல்லில் டிஜிட்டல் ஆடியோ அவுட்புட் (Digital Audio Output) கொடுக்கிறது. ஓப்பன் ஸ்பீக்கர்களை இந்த இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி டிவி கொண்டுள்ளது. யூடியூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) போன்ற ஹாட்-கீ கொண்ட ரிமோட் உள்ளது.

3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Port), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Port), எல்ஏஎன் (LAN), ஏவி (AV), ஆப்டிகல் (Optical) மற்றும் ஹெட்போக் ஜாக் (Headphone Jack) ஆகிய கனெக்டிவிட்டிகளை இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுக்கிறது. மேலும், வை-பை மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளும் இந்த டிவிக்கு கிடைக்கின்றன.

இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி டிவி ஆனது 2025 எடிஷனாகும். அதேபோல 32HDGQMDDAQ மாடலாகும். 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. டேபிள் மற்றும் வால் மவுண்ட் செய்து கொள்ளலாம். பிளாக் கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.8,999 விலைக்கு இப்போது வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
MOTOROLA 32 inch QLED HD Google TV 2025 Edition Price Drop on Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X