தலைவன் Motorola-வின் புது Watch.. 13 நாள் பேட்டரி, IP68 ரேட்டிங், GPS ஆதரவு.. எல்லாமே சூப்பர் பட்ஜெட்டில்!
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் ஆனது வருகிற ஜனவரி 23 ஆம் தேதி அன்று இந்தியாவில் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக மோட்டோரோலா சிக்னேச்சர் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கிடையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனுடன் சேர்த்து மோட்டோ வாட்ச் (Moto Watch) மாடலும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம் இந்த மாத தொடக்கத்தில் நடந்த சிஇஎஸ் 2026 நிகழ்வில் இந்த ஸ்மார்ட்வாட்ச்சை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆக இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து எந்த குழப்பமும் இல்லை. இது என்ன விலைக்கு வரும் என்பதை அறிந்துகொள்ளத்தான் வெளியீடு வரை நாம் காத்திருக்க வேண்டும். பெரும்பாலும் ரூ.10,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

மோட்டோ வாட்ச்சில் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இந்த ஸ்மார்ட்வாட்சில் 47 மிமீ அலுமினிய கவருக்குள் 1.43 இன்ச் OLED டிஸ்பிளே உள்ளது. கண்ட்ரோல்களுக்காக ஒரு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கிரவுன் உள்ளது. சிலிகான், லெதர் அல்லது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ராப்களுக்கு இடையில் நீங்கள் தேர்வு செய்யலாம்.
மேலும் இந்த டிஸ்பிளேவில் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உள்ளது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. மேலும் ஆழமற்ற நீருக்கு 1 ஏடிஎம் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சின் உடற்பயிற்சி அம்சங்களுக்காக, ற்காக மோட்டோரோலா நிறுவனமானது விளையாட்டு அறிவியல் நிறுவனமான போலாருடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இதன்கீழ் ஸ்டெப்ஸ், இதய துடிப்பு, இரத்த ஆக்ஸிஜன், மன அழுத்தம் மற்றும் தூக்கம் கண்காணிக்கப்படும். இதில் ஸ்மார்ட் கலோரிஸ், நைட்லி ரீசார்ஜ் மற்றும் ஆக்டிவிட்டி ஸ்கோர் போன்ற போலாரின் அம்சங்களும் அடங்கும். இவை வெறும் எண்களுக்கு பதிலாக மீட்பு மற்றும் உடற்பயிற்சி தீவிரத்தில் கவனம் செலுத்துகின்றன.
இதன் நீரேற்ற நினைவூட்டல்கள், மருந்து எச்சரிக்கைகள் மற்றும் தனிப்பயன் இலக்குகள் ஆகியவைகளும் பெறலாம். இந்த ஸ்மார்ட்வாட்சில் டூயல் பிரெக்வன்சி ஜிபிஎஸ் உள்ளது. மேலும் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோன் மூலம் போன் கால்களையும் கையாள முடியும். இந்த வாட்ச் வியர் ஓஎஸ்-இல் அல்ல, மோட்டோரோலாவின் சொந்த மென்பொருளில் இயங்குகிறது. இதை பயன்படுத்த உங்களுக்கு ஆண்ட்ராய்டு 12 அல்லது அதற்குப் பிந்தைய வெர்ஷன் தேவை.
பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை சாதாரண பயன்பாட்டுடன் 13 நாட்கள் அல்லது ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே இயக்கப்பட்டிருக்கும் போது சுமார் 7 நாட்கள் பேட்டரி லைஃப் கிடைக்கும். 5 நிமிட சார்ஜ் உங்களுக்கு ஒரு முழு நாள் பயன்பாட்டை வழங்கும் என்று மோட்டோரோலா கூறுகிறது.
மோட்டோ வாட்ச் ஆனது மேட் பிளாக் மற்றும் மேட் சில்வர் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும். வருகிற 2026 ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நீங்கள் இதை பிளிப்கார்ட் (Flipkart), மோட்டோரோலா.இன் (motorola.in) மற்றும் ஆஃப்லைன் கடைகளில் வாங்கலாம். அமெரிக்காவில், இந்த வாட்ச் ஜனவரி 22, 2026 முதல் வாங்க கிடைக்கும், சர்வதேச அளவில் பிப்ரவரியில் வாங்க கிடைக்கும்.
மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போனில் உறுதி செய்யப்பட்டுள்ள அம்சங்களை பொறுத்தவரை, இந்த போனின் வருகையை டீஸ் செய்யும் மைக்ரோசைட் தற்போது பிளிப்கார்ட்டில் நேரலையில் உள்ளது. அதன் மூலம் இது ஹோல் பஞ்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ரியர் கேமரா மற்றும் கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஷார்ட்கட் கீயுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட், அட்ரினோ 829 ஜிபியு மற்றும் 16 ஜிபி வரை ரேம் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.7-இன்ச் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போன் 50 மெகாபிக்சல் சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications








