ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 10 நாள் பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. அறிமுகமானது Moto ஸ்மார்ட்வாட்ச்.. என்ன விலை?
சமீபத்தில் தான் கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிக்சல் வாட்ச் 3 மாடலை ரூ.39,900 விலையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனமும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது மோட்டோ வாட்ச் 120 (Moto Watch 120) என்று அழைக்கப்படும் இந்த புதிய வாட்ச் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய வாட்ச் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மோட்டோ வாட்ச் 120 அம்சங்கள் (Moto Watch 120 specifications): 1.43-இன்ச் வட்ட வடிவ அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது மோட்டோ வாட்ச் ஓஎஸ் மூலம் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வயர்லெஸ் கனெக்டிவிட்டி பொறுத்தவரை புளூடூத் 5.3 ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்வாட்ச். மேலும் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.
100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் (100+ sports modes), 80க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்கள் ((80+ custom watch faces) உடன் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
ஸ்லீப் டிராக்கிங் (sleep tracking), ஸ்ட்ரெஸ் டிராக்கிங் (stress tracking), SpO2 மானிட்டர், HRM, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor) உள்ளிட்ட ஆரோக்கியமான அம்சங்களைக் கொண்டுள்ளது மோட்டோ வாட்ச் 120 மாடல். மேலும் இந்த வாட்ச் ஸ்மார்ட் நோட்டிபிக்கேஷன்ஸ் (Smart Notifications) ஆதரவையும் கொண்டுள்ளது.
குறிப்பாக மோட்டோ வாட்ச் 120 ஆனது 300mAh பேட்டரியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்வாட்ச் 10 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பு இந்த வாட்ச் மெட்டல் கேஸுடன் வருகிறது. பாண்டம் பிளாக் (Phantom Black), ரோஸ் கோல்ட் (Rose Gold) மற்றும் க்லேசியர் சில்வர் (Glacier Silver) நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்கலாம்.

அதேபோல் இன்-பில்ட் ஜிபிஎஸ் டிராக்கிங் (In-built GPS Tracking), ஆட்டோ ஸ்போர்ட்ஸ் டிடெக்சன் (Auto Sports Detection), ஆக்சிலரோமீட்டர் சென்சார் (Accelerometer Sensor), இன்-பில்ட் மைக்ரோபோன் (n-Built Microphone) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோ வாட்ச் 120 ஆனது தற்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வரும். பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை $129.99 (இந்திய மதிப்பில் ரூ.10,913)-ஆக உள்ளது. தரமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் வெளிவந்துள்ளது நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








