Home
Gadgets

நான் இருக்கேன் இறங்கி அடி.. Google சப்போர்ட்.. ரூ.1000 கேப்பு.. Apple AirTags-க்கு ஆப்பு.. Moto Tag அறிமுகம்!

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஏர்டேக்ஸ் (AirTags) டிராக்கிங் டிவைஸிற்கு போட்டியாக, மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ டேக் (Moto Tag) என்கிற புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. சுவாரசியமாக இது கூகுள் நிறுவனத்தின் பைண்ட் மை டிவைஸ் (Google Find My Device) ஆதரவுடன் வருகிறது மற்றும் ஆப்பிள் ஏர் டேக்ஸ் ட்ராக்கரை விட மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ டேக் ப்ளூடூத் ட்ராக்கரின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை வழங்கும்? இதோ விவரங்கள்:

யுடபுள்யூபி (UWB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அல்ட்ரா-வைட்பேண்ட் சிப் உடன் ஆண்ட்ராய்டு டிவைஸ்களுக்கான ப்ளூடூத் டிராக்கராக மோட்டோ டேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற டிவைஸ்கள் மூலம் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட பொருட்களை கண்டுபிடிக்க உதவும் லொக்கேஷன் டிராக்கர்கள் பயன்பாட்டில் உள்ளன.

Apple AirTags-க்கு ஆப்பு.. Moto Tag அறிமுகம்!

அப்படிப்பட்ட ட்ராக்கர் சந்தையில் டைல் மற்றும் ஆப்பிள் ஆகிய இரண்டுமே முக்கிய நிறுவனங்களாக திகழ்கின்றன. ஆனால் ஆப்பிளின் ஏர்டேக்ஸ் ஆனது ஆப்பிள் டிவைஸ்களுடன் மட்டுமே இணக்கமானதாக இருப்பதால் ஆண்ட்ராய்டு டிவைஸ்களுக்கான ஒரு நல்ல ட்ராக்கருக்கான தேவை நீண்ட நாட்களாகவே நிரப்படப்பாமல் இருந்தது. தற்போது மோட்டோரோலா நிறுவனம் அதன் மோட்டோ டேக் அறிமுகத்தின் வழியாக அந்த இடத்தை நிரப்பியுள்ளது

மோட்டோ டேக் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? முன்னரே குறிப்பிட்டபடி மோட்டோ டேக் ஆனது கூகுளின் பைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கிற்கான ஆதரவை வழங்குகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா அல்லது கூகுள் பிக்சல் 8 போன்ற யுடபுள்யூபி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படும்போது, ​மோட்டோ டேக் ​டிராக்கர் ஆனது துல்லியமான இருப்பிட-கண்காணிப்பு திறன்களை வழங்கும் என்று மோட்டோரோலா கூறுகிறது.

இந்த டிவைஸ் ஒரு பிரத்யேக மல்டி-ஃபங்க்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது, அதை அழுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்க முடியும் என்று மோட்டோரோலா நிறுவனம் கூறுகிறது. மேலும் இதை, எந்தவொரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலும் புகைப்படம் எடுக்க உதவும் ஒரு ரிமோட் கேப்சர் பட்டனாகவும் பயன்படுத்தலாம்.

மோட்டோ டேக்கின் செட்டப் செயல்முறையை எளிதாக்க இது கூகுள் ஃபாஸ்ட் பேர்-ஐயும் (Google Fast Pair) ஆதரிக்கிறது. மோட்டோ டேக்கிற்கான ஸ்டான்ட்அலோன் ஆப் மூலம், பயனர்கள் டேக்கின் பெயரை மாற்றலாம், அலெர்ட் சவுண்ட்டின் அளவை சரிசெய்யலாம் மற்றும் பேட்டரி லைஃப்பை சரிபார்க்கலாம்.

மேலும் மோட்டோ டேக் ப்ளூடூத் டிராக்கர் ஆனது பயனரின் ப்ரைவஸியை பாதுகாப்பதாகவும் மோட்டோரோலா நிறுவனம் கூறுகிறது. அதாவது மோட்டோ டேக்கின் உரிமையாளர் மற்றும் அதன் இருப்பிடம் போன்ற தகவல்களை, யாருடன் பகிரப்படுகிறதோ அவர்களால் மட்டுமே அதை கண்டறிய / அறிந்துகொள்ள முடியும்.

மேலும் தெரியாத தரப்பினர் தங்கள் இருப்பிடத்தை (Location) கண்காணிக்க முயற்சி செய்தால், அதுகுறித்து பயனர்கள் எச்சரிக்கப்படுவார்கள். கூடுதலாக, பயனர்களை ஃபாலோ செய்யும் தேவையற்ற டிராக்கர்களை (unwanted trackers) சரிபார்க்க மேனுவல் ஸ்கேன் (Manual Scan) செய்யவும் முடியும் என்றும் மோட்டோரோலா நிறுவனம் கூறுகிறது.

மோட்டோ டேக் ஆனது தேர்ட் பார்ட்டி ஆக்சஸெரீஸ்களுடன் இணக்கமானதாக இருக்கும். கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கியமான அம்சங்களை பொறுத்தவரை, உத்து ஐபி 67 ரேட்டிங் உடன் வருகிறது. அதாவது மோட்டோ டேக் ஆனது 30 நிமிடங்கள் வரை 1 மீட்டர் வரை நீரில் மூழ்குவதை தாக்குப்பிடிக்க முடியும். மேலும் இதில் சிஆர் 2032 பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது,. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு வருடம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

மோட்டோ டேக்கின் விலை நிர்ணயம் என்ன? அமெரிக்காவில் இது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.2,423 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நான்கு மோட்டோ டேக்களை கொண்ட ஒரு பேக் ஆனது தோராயமாக ரூ.8,270 க்கும் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இது ஆப்பிள் ஏர்டேக்கை (ரூ.34890) விட ரூ.1000 மலிவானதாக இருக்கிறது.

மோட்டோ டேக் ட்ராக்கரின் அமெரிக்க விற்பனையானது வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ டேக் ஆனது இந்தியா உட்பட பிற சந்தைகளில் எப்போது அறிமுகமாகும் அல்லது அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

Best Mobiles in India

English summary
Moto Tag Bluetooth tracker with Google Find My Device Support Launched Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X