Home
Gadgets

600 நாள் பேட்டரி, IP68 ரேட்டிங், துல்லியமான UWB ஆதரவு.. ஆளுக்கு 2 வாங்கும் விலையில் Moto Tag 2 அறிமுகம்!

மோட்டோரோலா (Motorola) நிறுவனமானது, மிகவும் அமைதியான முறையில் ஆக அதன் புதிய ப்ளூடூத் டிராக்கர் ஆன மோட்டோ டேக் 2 (Moto Tag 2) மாடலை அறிமுகம் செய்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் மோட்டோ டேக் (Moto Tag) மாடலானது கடந்த 2025-இல் இந்தியாவை அறிமுகம் செய்யப்பட்டது

ஆனால் மோட்டோ டேக் 2 மாடல் ஆனது, இப்போதைக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயமாக இந்திய சந்தைக்கு வரும், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஏனென்றால் மோட்டோ டேக் ஆனது இந்திய சந்தையில் இன்னமும் விற்பனைக்கு உள்ளது.

ஆளுக்கு 2 வாங்கும் விலையில் Moto Tag 2 அறிமுகம்!

மோட்டோ டேக் 2 முக்கிய அம்சஙகள்: இது மிகவும் சிம்பிள் ஆன டிசைனில் - சாவிகள், பைகள், பணப்பைகள் அல்லது பயண பெட்டிகள் போன்றவற்றில் இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய டிராக்கர் ஆகும். மேலும், இது ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் கூகுளின் ஃபைண்ட் ஹப் நெட்வொர்க் ஆதரவையும் கொண்டுள்ளது.

ஆனால், மிகவும் சுவாரஸ்யமான மேம்பாடுகள் இதன் உள்ளேதான் நிகழ்கின்றன. மோட்டோ டேக் 2 ஆனது, ப்ளூடூத் 6.0 மற்றும் ப்ளூடூத் சேனல் சவுண்டிங்குடன் அல்ட்ரா-வைட்பேண்ட் (UWB) தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது. இது, வழக்கமான ப்ளூடூத் டிராக்கர்களுடன் ஒப்பிடும்போது, ​​அருகிலுள்ள இருப்பிடத்தை மிகவும் துல்லியமாக கண்டறிய உதவுகிறது.

இதன் பொருள் என்னவென்றால், தொலைந்து போன பொருள் "அருகில்" உள்ளது என்று வெறுமனே மேலோட்டமாக சொல்வதற்கு பதிலாக, உங்கள் ஸ்மார்ட்போன் திசைக் குறிகாட்டிகள் மற்றும் மிகவும் துல்லியமான தூர அளவீடுகளுடன் அந்த பொருளை நோக்கி உங்களை வழிநடத்தும். இது குறிப்பாக வீட்டிற்குள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் வீட்டிற்குள் தான் பெரும்பாலான ப்ளூடூத் டிராக்கர்கள் சில நேரங்களில் எரிச்சலூட்டும் வகையில் துல்லியமற்றதாக செயல்படுகின்றன.

ஒரு சாதாரண, மாற்றக்கூடிய சிஆர்2032 பேட்டரியை பயன்படுத்தினாலும் கூட மோட்டோ டேக் 2 டிராக்கர் ஆனது 600 நாட்கள் வரை நீடிக்கும் என்று மோட்டோரோலா நிறுவனம் கூறுகிறது. இது முதல் தலைமுறை மோட்டோ டேக்கின் "ஓராண்டு பேட்டரி" லைஃப்பை விட ஒரு பெரிய மேம்பாடாகும்.

மேலும் மோட்டோ டேக் 2 ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி68 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. எனவே, இது மழை, நீர் சிதறல்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டு சேதங்களை அதிக சிரமமின்றி தாங்கும். முன்னரே குறிப்பிட்டபடி, மோட்டோரோலா நிறுவனம் இதன் டிசைனை எல்லாவற்றையும் மிகவும் எளிமையாக வைத்துள்ளது.

இந்த டிராக்கர் - பணப்பைகள் அல்லது பயண பெட்டிகளுக்குள் பொருந்தும் அளவுக்கு மெல்லியதாக உள்ளது. மேலும், பெரும்பாலான டிராக்கர்கள் பயன்படுத்தும் வழக்கமான வெள்ளை அல்லது கருப்பு நிறத்திற்கு பதிலாக, இது பச்சை மற்றும் ஆரஞ்சு கலர் ஆப்ஷன்களிலும் வருகிறது.

மேலும், இதில் சில சிறிய வசதி அம்சங்களும் உள்ளன. பில்ட் -இன் பட்டனை பயன்படுத்தி, இணைக்கப்பட்ட உங்கள் ஸ்மார்ட்போனை ஒலிக்க செய்யவோ அல்லது கேமரா ஷட்டரை தொலைவிலிருந்து இயக்கவோ முடியும். ப்ரைவஸி மற்றும் செக்யூர் இருப்பிட பகிர்விற்காக, மோட்டோரோலா நிறுவனமானது கூகுளின் மறைகுறியாக்கப்பட்ட ஃபைண்ட் ஹப் சூழலமைப்பையும் நம்பியுள்ளது.

மொத்தத்தில், மோட்டோ டேக் 2 ஆனது - தயாரிப்பை அதிக சிக்கலாக்காமல், ஆப்பிளின் ஏர்டேக்கிற்கு ஒரு திறமையான ஆண்ட்ராய்டு மாற்றீட்டை உருவாக்க மோட்டோரோலா முயற்சிப்பது போல் தோன்றுகிறது. மேலும், சிக்னல் வலிமை மதிப்பீட்டை மட்டுமே முழுமையாக சார்ந்திருக்கும் பல மலிவான புளூடூத் டிராக்கர்களை விட, இதன் யுடபுள்யூபி (UWB) ஆதரவு மட்டுமே இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க நன்மையை அளிக்கிறது.

மோட்டோ டேக் 2 விலை: மோட்டோ டேக் 2 தற்போது இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற சந்தைகளில் முறையே £29.99 (இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.3885) மற்றும் €40 க்கும் (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.4490) வாங்க கிடைக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இதன் அறிமுகம் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டதாக தெரிகிறது, இருப்பினும் பின்னர் பரவலாக, உலகளவில் அறிமுகம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Moto Tag 2 With 600 Days Battery IP68 Rating UWB Support Launched Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X