மிக மலிவு விலை, 7700mAh பேட்டரி உடன் Moto Tab G62: டேல்லெட்டின் லுக் வேற லெவல்!

|

ஸ்னாப்டிராகன் 680 SoC, 7,700mAh பேட்டரி உடன் Moto Tab G62 உடன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

Moto Tab G62 டேப்லெட் அறிமுகம்

Moto Tab G62 டேப்லெட் அறிமுகம்

சமீப சில நாட்களாக மோட்டோரோலா நிறுவனம் தொடந்த பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி நிறுவனம் தற்போது Moto Tab G62 டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லெட் ஆனது குறைந்த விலையில் மேம்பட்ட அம்சங்களோடு அறிமுகமாகி இருக்கிறது.

8 எம்பி ஃபோகஸ் செல்பி கேமரா

8 எம்பி ஃபோகஸ் செல்பி கேமரா

Moto Tab G62 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC உடன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த டேப்லெட் 4ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Moto Tab G62 டேப்லெட் ஆனது 2K+ தெளிவுத்திறன் உடன் 10.61-இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.

இந்த டிஸ்ப்ளே ஆனது TUV ரைன்லேண்ட் ப்ளூ லைட் எமிஷன் சான்றிதழை பெற்றிருக்கிறது. இந்த டேப்லெட் 8 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் ப்ரைமரி ரியர் சென்சாரைக் கொண்டிருக்கிறது.

பின்புறத்தில் ஒற்றை கேமரா மட்டுமே உள்ளது எல்இடி ஃப்ளாஷ் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. டேப்லெட் முன்பக்கத்தில் 8 எம்பி ஃபோகஸ் செல்பி கேமரா உள்ளது.

Moto Tab G62 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Moto Tab G62 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

முன்னதாக குறிப்பிட்டது போல் Moto Tab G62 விலை மிகக் குறைவாக இருக்கிறது. Moto Tab G62 டேப்லெட்டின் Wi-Fi வேரியண்ட் விலை ரூ.15,999 ஆகும்.

அதேபோல் இதன் LTE வகை விலை ரூ.17,999 ஆகும். Frost Blue வண்ண விருப்பத்துடன் வைஃபை மாறுபாடு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

அதேபோல் Moto Tab G62 இன் LTE மாறுபாடு முன்பதிவுக்கு கிடைக்கிறது. இந்த மாறுபாடு ஆகஸ்ட் 22 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும்.

Moto Tab G62 சிறப்பம்சங்கள்

Moto Tab G62 சிறப்பம்சங்கள்

Moto Tab G62 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்குகிறது.

4ஜி நெட்வொர்க் ஆதரவை இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது. ஒரு நானோ சிம் ஸ்லாட் மற்றும் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இதில் இடம்பெற்றுள்ளது.

2K+ (2,000x1,200 பிக்சல்கள்) தெளிவுத்திறன் ஆதரவை இந்த டேப்லெட் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது TUV ரைன்லேண்ட் ப்ளூ லைட் எமிஷன் சான்றிதழை பெற்றிருக்கிறது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

அதேபோல் Moto Tab G62 LTE ஆனது Qualcomm Snapdragon 680 SoC மூலம் இயக்கப்படுகிறது, இந்த டேப்லெட் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.

மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்ய முடியும். வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்புக்கான IP52 மதிப்பீட்டை இந்த டேப்லெட் பெற்றிருக்கிறது.

செல்ஃபி ஷூட்டரில் பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

செல்ஃபி ஷூட்டரில் பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

Moto Tab G62 ஆனது 8 எம்பி ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இதன் மூலம் 1080p வீடியோக்களை பதிவு செய்ய முடியும். டேப்லெட்டின் முன்புறத்தில் 8 எம்பி ஃபோகஸ் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

செல்ஃபி ஷூட்டரில் டூயல் கேப்சர், ஸ்பாட் கலர், டைம்லேப்ஸ், ஃபேஸ் பியூட்டி, வீடியோ ஸ்னாப்ஷாட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளது.

7,700mAh பேட்டரி

7,700mAh பேட்டரி

Moto Tab G62 டேப்லெட் ஆனது Dolby Atmos ஆதரவுடன் கூடிய குவாட் ஸ்பீக்கர் அமைப்பு இருக்கிறது.

ப்ளூடூத் வி5.1, டூயல் பேம்ட் வைஃபை, யூஎஸ்பி டைப் சி போர் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் உள்ளது.

Moto Tab G62 ஆனது 20W சார்ஜிங் ஆதரவுடன் 7,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதன் எடை 465 கிராம் ஆகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Moto Tab G62 Launched in India with 7700mAh Battery: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X