Home
Gadgets

ஆகஸ்ட் 8-க்கு ரெடியாகுங்க.. 10200mAh பேட்டரி.. 68W சார்ஜிங்.. QUAD ஸ்பீக்கர்கள்.. புது Moto பேட்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மோட்டோ பேட் 70 மாடல் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டுக்கு முன்பே முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. ஆனால், விலை விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், மோட்டோ பேட் 70 ப்ரோ ஏற்கனவே வெளியாகிவிட்டதால், இந்த மாடலின் விலையை யூகிக்க முடியும்.

கடந்த ஜூன் மாதத்திலேயே மோட்டோ பேட் 70 ப்ரோ வெளியாகியது. அடுத்த மாதத்தில் மோட்டோ பேட் 70 வெளியாக இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்க இருக்கிறது. இந்த தளத்தில் முக்கிய பீச்சர்கள் உறுதியாகிவிட்டன. இதை முதலில் பார்க்கலாம்.

ஆகஸ்ட் 8-க்கு ரெடியாகுங்க.. 10200mAh பேட்டரி.. 68W சார்ஜிங்.. மாடல்?

மோட்டோ பேட் 70 அம்சங்கள் (Moto Pad 70 Specifications): 12.1 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2.5K ரெசொலுஷன் கிடைக்கிறது. மேலும், டிசிஐ பி3 கலர் காமட் கொடுக்கப்பட்டு உள்ளது. பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (Octa Core MediaTek Dimensity 6400) சிப்செட்டை இந்த மோட்டோ பேட் 70 பேக் செய்துள்ளது

ஜெமினி ஏஐ (Gemini AI), சர்க்கிள் டூ சர்ச் (Circle to Search), ஏஐ ரீரைட் (AI Rewrite) மற்றும் ஏஐ சம்மரி (AI Summary) மற்றும் ஸ்மார்ட் கனெக்ட் (Smart Connect) உள்ளிட்ட பீச்சர்களுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் + 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த மோட்டோ பேட் 70 மாடல் கொடுக்க இருக்கிறது.

13 எம்பி ரியர் கேமரா மற்றும் செல்பீ, வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை பேக் செய்துள்ளது. குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) மட்டுமல்லாமல் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, வீடியோ குவாலிட்டி மட்டுமல்லாமல், ஆடியோ குவாலிட்டியும் பிரீமியம் அனுபவம் கொடுக்கும். 10200mAh பேட்டரி மற்றம் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இருக்கிறது.

இந்த பேட்டரியுடன் 6.29 எம்எம் தடிமன் மற்றும் 530 கிராம் எடை கொடுத்துள்ளது. பேட் மட்டுமல்லாமல், மோட்டோ பென் (Moto Pen), மோட்டோ போலியோ கீபோர்ட் (Moto Folio Keyboard) சப்போர்ட் கொடுக்கிறது. இந்திய மார்கெட்டில் ஏற்கனவே மோட்டோ பேட் 70 ப்ரோ (Moto Pad 70 Pro) மாடல் வெளியாகிவிட்டது. இந்த மாடலின் அறிமுக விலை ரூ.36,999ஆக இருந்தது.

ஆகவே, இதைவிட மலிவான விலைக்கு 5ஜி டேப்லெட்டை மோட்டோ பிரியர்கள் எதிர்பார்த்தனர். இதனாலேயே மோட்டோ பேட் 70 கம்மியான பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது. ரூ.30,000 பட்ஜெட்டில் இதை எதிர்பார்க்கலாம். இது 5ஜி மாடலாக மட்டுமல்லாமல், வை-பை மாடலாகவும் வெளியாக வாய்ப்புள்ளது. ஆகவே, வை-பை மாடலின் விலை மேலும் கம்மியாக இருக்கலாம்.

முன்னதாக வெளியான மோட்டோ பேட் 70 ப்ரோ மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, மோட்டோ பேட் 70 மாடலிலும் அட்ரினோ ஜிபியு எதிர்பார்க்கலாம். 13 இன்ச் (3504 x 2190 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது.

இதைவிட சிறிய டிஸ்பிளேவே மோட்டோ பேட் 70 மாடலில் கிடைக்க இருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 13 எம்பி ஆட்டோ போகஸ் மெயின் கேமரா மற்றும் 8 எம்பி பிக்சடு போகஸ் செல்பீ கேமரா கிடைக்கிறது. குவாட் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் உள்ளது. ஃபிங்கர்பிரின்ட் மற்றும் பவர் கீ ஒன்றாக கொடுக்கப்பட்டு உள்ளது. இதையே மோட்டோ பேட் 70 மாடலில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Moto Pad 70 With Dimensity 6400 Launching In India On August 8 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X