Home
Gadgets

மிட்-ரேஞ்ச் மிரளுது.. ரூ.4000 ஆஃபரில் 10200mAh பேட்டரி.. 68W ஃபாஸ்ட் சார்ஜிங்.. JBL ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மோட்டோ பேட் 70 ப்ரோ (moto Pad 70 PRO) மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் 10200mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், ஆட்டோ போகஸ் கேமரா, ஜேபிஎல் ஸ்பீக்கர்களை பேக் செய்துள்ளது. இந்த மோட்டோ பேட் 70 ப்ரோ மாடலின் விலை மற்றும் ஆஃபர்களை தெரிந்து கொள்ளலாம்.

மோட்டோ ஸ்மார்ட்போன்களை போலவே டேப்லெட் மாடல்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதில் பிரீமியம் பீச்சர்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கும். இந்த வரிசையில் மோட்டோ பேட் 70 ப்ரோ சேர்ந்துள்ளது. ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட்டுடன் பட்டையை கிளப்பி இருக்கிறது.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. ரூ.4000 ஆஃபரில் 10200mAh பேட்டரி.. மாடல்?

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.36,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் கீபோர்டுடன் கிடைக்கும் வேரியண்ட்டின் விலை ரூ.45,999ஆக இருக்கிறது. இதில் பேங்க் ஆஃபர் கிடைக்க இருக்கிறது.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.32,999 விலைக்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.35,999 விலைக்கும் வாங்கி கொள்ளாம். மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் கீபோர்ட் கொண்ட வேரியண்ட்டை ரூ.41,999 விலைக்கு வாங்கலாம். ஜூலை 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

மேட்டோரோலா தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், பிளிப்கார்ட் தளத்திலும் கிடைக்க இருக்கிறது. ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கும். மோட்டோரோலை ஸ்னாப்-ஆன் கீபோர்டு தனியாக வாங்கினால் ரூ.5,999ஆக விலை இருக்கிறது. இந்த விலைக்கு ஏற்ற மாடலாக இருக்கிறது.

மோட்டோ பேட் 70 ப்ரோ அம்சங்கள் (moto Pad 70 PRO Specifications): 13 இன்ச் (3504 x 2190 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த மோட்டோ பேட் 70 ப்ரோ மாடல் கொடுக்கிறது. மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. 99 சதவீ டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் கொண்ட டிஸ்பிளேவாக இருக்கிறது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட்டை இந்த மோட்டோ பேட் 70 ப்ரோ மாடல் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது. 13 எம்பி ஆட்டோ போகஸ் மெயின் கேமரா மற்றும் 8 எம்பி பிக்சடு போகஸ் செல்பீ கேமரா கிடைக்கிறது. ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் பவர் கீ செக்யூரிட்டி உள்ளது. ஐபி52 ரேட்டிங் கொண்ட மாடலாக இருக்கிறது. 10200mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
moto Pad 70 PRO With 10200mAh Battery Rs 4000 Discount in India Check Price List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X