SALE பிச்சிக்க போகுது.. ரூ.25,999 போதும்.. 10200mAh பேட்டரி.. JBL ஸ்பீக்கர்கள்.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
டேப்லெட் பிரியர்கள் கனவிலும் நினைக்காத பட்ஜெட்டில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 12.7 இன்ச் டிஸ்பிளே, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10200mAh பேட்டரி, ஆட்டோ போகஸ் கொண்ட ரியர் கேமரா போன்ற பீச்சர்களுடன் மோட்டோ பேட் 60 ப்ரோ (Moto Pad 60 PRO) டேப்லெட் வெளியாகி இருக்கிறது. மோட்டோ பென் ப்ரோவுடன் கிடைக்க இருக்கும் இந்த மோட்டோ டேப்லெட்டின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த டேப்லெட்டில் மோட்டோ பென் ப்ரோ சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பென் மூலம் ஏஐ சார்ச்ச், ஏஐ டிரான்ஸ்லேட் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல ஸ்கெட்ச் என்ஹான்ஸ்மெண்ட் எதிர்பார்க்கலாம். இந்த மோட்டோ பென் ப்ரோவுக்கு அல்ட்ரா லோவ் லேட்டன்சி (Ultra Low Latency), டில்ட் டிடெக்சன் (Tilt Detection), பால்ம் ரிஜெக்சன் (Palm Rejection) சப்போர்ட் கிடைக்கிறது.

அதேபோல பிரசர் டிடெக்சன் (Pressure Detection) மற்றும் 35 மணி நேரங்களுக்கு பேட்டரி பேக்கப் வருகிறது. ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் போன்ற டிவைஸ்களில் எளிதாக கனெக்ட் செய்து கொள்ள ஸ்மார்ட் கனெக்ட் (Smart Connect) சப்போர்ட் கிடைக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் சின்க் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதில் ஸ்வைப், ஃபைல் டிரான்ஸ்பர் அடங்கும்.
மோட்டோ பேட் 60 ப்ரோ (Moto Pad 60 PRO Specifications): இந்த டேப்லெட் பிரீமியம் வீடியோ அவுட்புட் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு பக்காவான டிஸ்பிளே பீச்சர்களை கொடுக்கிறது. ஏனென்றால், 3K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 12.7 இன்ச் (2944 x 1840 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 273 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.
மேலும், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆகவே, ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு பக்காவான வீடியோ அனுபவம் கிடைக்கும். இந்த பீச்சர்களுக்கு ஏற்ப 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மட்டுமல்லாமல் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சப்போர்ட் வருகிறது.
இந்த மோட்டோ பேட் 60 ப்ரோ டேப்லெட்டில் 10200mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங், டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. 12.7 இன்ச் டிஸ்பிளே இருந்தாலும், இந்த பேட்டரி மூலம் 10 மணி நேரங்களுக்கு அதிகமாக பிளேபேக் பெற்று கொள்ளலாம். இதில் குறையாக இருப்பது ஓஎஸ் மட்டும்தான். ஏனென்றால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.
ஆனால், மார்கெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் வந்துவிட்டது. இருப்பினும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் வரையில் அப்டேட் கொடுக்கப்படும் என்று மோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மோட்டோ டேப்லெட்டில் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8300 4nm) சிப்செட் கிடைக்கிறது.
ஜேபிஎல் பிராண்ட் குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், 13 எம்பி ஆட்டோ போகஸ் மெயின் மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. பான்டோன் ப்ரோன்ஸ் கிரீன் கலரில் இருக்கிறது. 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆகவும், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.28,999ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட்டில் ரூ.2000 டிஸ்கவுண்ட் போக ஏப்ரல் 23ஆம் தேதி முதல் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications