காதுல மாட்டுனா வேற உலகத்துக்கே போலாம்.. பட்ஜெட் விலையில் புது Moto பட்ஸ்.. 48 மணிநேர பேட்டரி, ANC, IP54!
மோட்டோரோலா நிறுவனம் அதன் புதிய TWS இயர்பட்ஸ் மாடல்களாக மோட்டோ பட்ஸ் லூப் (Moto Buds Loop) மற்றும் மோட்டோ பட்ஸ் பாஸ் (Moto Buds Bass) ஆகியவைகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எங்கு வாங்குவது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, மோட்டோ பட்ஸ் லூப் ஆனது போஸ்-டியூன்டு (Bose-Tuned) இயர்பட்ஸ் ஆகும். மேலும் இது சார்ஜிங் கேஸையும் (Charging Case) சேர்த்து 39 மணிநேர மொத்த பேட்டரி லைஃப்பை (39 Hours Battery Life) வழங்குவதாக மோட்டோரோலா நிறுவனம் கூறுகிறது.

மறுகையில் உள்ள மோட்டோ பட்ஸ் பாஸ் இயர்பட்ஸ் ஆனது 48 மணிநேர மொத்த பிளேபேக் டைமை (48 Hours Playback Time) வழங்குவதாக மோட்டோரோலா நிறுவனம் கூறுகிறது. மேலும் இது 50dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active noise cancellation - ANC) ஆதரவையும் கொண்டுள்ளது.
மோட்டோ பட்ஸ் லூப், மோட்டோ பட்ஸ் பாஸ் விலை, விற்பனை விவரங்கள்: இந்தியாவில் மோட்டோ பட்ஸ் லூப் ஆனது விலை ரூ. 7,999 க்கும், மோட்டோ பட்ஸ் பாஸ் ஆனது ரூ.1,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவைகள் முறையே செப்டம்பர் 1 மற்றும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் நாட்டில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ பட்ஸ் பாஸ் மாடல் ஆனது பான்டோன்-சான்றளிக்கப்பட்ட ப்ளூ ஜூவல், டார்க் ஷேடோ மற்றும் போஸி கிரீன் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள மோட்டோ பட்ஸ் லூப் மாடல் ஆனது ட்ரெக்கிங் கிரீன் கலரில் வாங்க கிடைக்கும். இந்த 2 இயர்பட்ஸ் மாடல்களுமே பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட், மோட்டோரோலா இந்தியா இ-ஸ்டோர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ரீடெயில் கடைகள் வழியாக விற்பனை செய்யப்படும்.
மோட்டோ பட்ஸ் லூப் இயர்பட்ஸ் முக்கிய அம்சங்கள்: மோட்டோ பட்ஸ் லூப் மாடல் ஆனது 12மிமீ ட்ரைவர்களால் இயக்கப்படுகிறது மற்றும் போஸ் ஆல் ட்யூன் செய்யப்படுகிறது. இது 3டி போன்ற ஆடியோ அனுபவத்திற்காக ஸ்பேஷியல் சவுண்ட் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது, மேலும் ஒவ்வொரு இயர்போனிலும் வாய்ஸ் பிக்அப் சென்சார்கள் மற்றும் கிரிஸ்டல்டாக் ஏஐ உடனான டூயல் மைக் சிஸ்டம் உள்ளது, இது தெளிவான கால்களுக்காக பேக்கிரவுண்ட் இரைச்சலை குறைக்கும்
மேலும் மோட்டோ பட்ஸ் லூப் மாடல் ஆனது மோட்டோ ஏஐ மற்றும் ஸ்மார்ட் கனெக்ட் அம்சங்களையும் ஆதரிக்கிறது. கூடவே மோட்டோ பட்ஸ் ஆப் உடன் இணக்கமாக செயல்படும். இது ப்ளூடூத் 5.4 இணைப்பை வழங்குகிறது மற்றும் ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுடனும் இணைக்க முடியும். இந்த இயர்பட்ஸ் மாடல் ஆனது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேடிங்கையும் கொண்டுள்ளன.
இந்த இயர்பட்ஸ்-ஐ ஒரு முறை சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரம் வரை நீடிக்கும் என்றும், கேஸுடன் சேர்ந்து, மொத்த பிளேபேக் நேரம் 39 மணி நேரம் வரை நீடிக்கும் என்றும் மோட்டோரோலா நிறுவனம் கூறுகிறது. 10 நிமிட குவிக் சார்ஜ் மூன்று மணி நேரம் வரை பயன்பாட்டை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
மோட்டோ பட்ஸ் பாஸ் இயர்பட்ஸ் முக்கிய அம்சங்கள்: மோட்டோ பட்ஸ் பாஸ் மாடல் ஆனது 12.4 மிமீ காம்போசிட் டைனமிக் டிரைவர்கள் மற்றும் ஹை-ரெஸ் எல்டிஏசி ஆடியோ கோடெக் ஆதரவை கொண்டுள்ளது. இந்த இன்-இயர் டிசைன் இயர்பட்ஸ் ஆனது 50dB வரை ஏஎன்சி-ஐ டிரான்ஸ்பரன்சி, அடாப்டிவ் மற்றும் ஆஃப் மோட்களுடன் ஆதரிக்கிறது.
இது ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் மோட்டோ பட்ஸ் ஆப் இணக்கத்தன்மையையும் ஆதரிக்கிறது. கஸ்டமைஸ் செய்யக்கூடிய ANC, EQ மோட்கள் மற்றும் டச் கண்ட்ரோல் உடன் வரும் இந்த இயர்பட்ஸ் ஆனது கூகுள் ஃபாஸ்ட் பேர், ப்ளூடூத் 5.3 இணைப்பு மற்றும் லோ-லேட்டன்சி ஸ்ட்ரீமிங்கையும் ஆதரிக்கிறது. ஒவ்வொரு இயர்பட்களிலும் கிரிஸ்டல்டாக் AI, ENC மற்றும் தெளிவான கால்களுக்கான மூன்று மைக்ரோஃபோன்கள் உள்ளன.
இந்த இயர்பட்ஸ் 7 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்பை வழங்குவதாக கூறப்படுகிறது, மேலும் கேஸுடன் சேர்த்து ஒரு முறை சார்ஜ் செய்தால் 48 மணிநேரம் வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. 10 நிமிட குவிக் சார்ஜ் ஆனது இரண்டு மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. கடைசியாக இந்த இயர்பட்ஸ் ஐபி54 தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








