பின்றானே இவன்.. சிங்கிள் சார்ஜில் 48 மணி நேர பேக்கப்.. 2 டைனாமிக் டிரைவர்.. 55dB ஏஎன்சி.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய பட்ஜெட் விலை வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலான மோட்டோ பட்ஸ் 2 (Moto Buds 2) மாடலை இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ ஜி37 மற்றும் மோட்டோ ஜி37 பவர் ஆகிய ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து இது களமிறக்கப்பட்டுள்ளது. மலிவான விலையில் பிரீமியம் குவாலிட்டி ஆடியோ அனுபவத்தை வழங்கும்படி பீச்சர்கள் இருக்கின்றன.
பிரீமியம் ஆடியோ குவாலிட்டி:
டூயல் டிரைவர் செட்டப்: இதில் 11எம்எம் மற்றும் 6எம்எம் அளவிலான 2 டைனாமிக் டிரைவர்கள் (Dynamic Drivers) கொடுக்கப்பட்டுள்ளதால், மியூசிக் வேரியேஷன்களை துல்லியமாக கேட்க முடியும்.
ஹை-ரெஸ் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ: ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் எல்டிஏசி (LDAC) டெக்னாலஜி கிடைப்பதால், ஆடியோவின் குவாலிட்டியாக இருக்கும். சினிமாடிக் அனுபவம் கொடுக்க ஸ்பேஷியல் ஆடியோ (Spatial Audio) சப்போர்ட்டும் கிடைக்கிறது.

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC):
55dB நாய்ஸ் கேன்சலேஷன்: டிராவலின் போதோ அல்லது மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலோ சுற்றியிருக்கும் நாய்ஸை 55dB வரையில் கட்டுப்படுத்தும்படி டைனாமிக் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Dynamic Active Noise Cancellation) இந்த மோட்டோ பட்ஸ் 2 மாடலில் கிடைக்கிறது.
டிரான்ஸ்பரன்சி மோட்: இயர்பட்ஸை கழற்றாமலேயே வெளியில் பேசுவதை கேட்க டிரான்பரன்ஸி மோட் ( Transparency Mode) கொடுக்கப்பட்டுள்ளது. கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களுக்காக 6 மைக்ரோஃபோன்கள், என்விரான்மென்ட் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC) கொடுக்கப்பட்டுள்ளது. கிரிஸ்டல்டாக் ஏஐ (CrystalTalk AI) டெக்னாலஜி கொண்டுள்ளது.
மிரட்டலான பேட்டரி பேக்கப்
48 மணிநேர ப்ளேபேக் கொடுக்கிறது. இயர்பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 11 மணிநேரமும், சார்ஜிங் கேஸோடு சேர்த்து மொத்தம் 48 மணிநேரமும் பயன்படுத்தலாம். ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளதால் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 3 மணிநேரம் வரை மியூசிக் கேட் முடியும்.
ஸ்மார்ட் பீச்சர்கள்:
ப்ளூடூத் 6.0 & டூயல் பேரிங்: அதிநவீன ப்ளூடூத் 6.0 கனெக்டிவிட்டி மற்றும் ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களை இணைத்து கொள்ள டூயல் பேரிங் (Dual Pairing) கொண்டுள்ளது. வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பார்க்கையில். இயர்பட்களில் IP54 ரேட்டிங் கிடைக்கிறது, சார்ஜிங் கேஸில் IPX2 ரேட்டிங் கிடைக்கிறது.
மேலும், கேமிங் மோட் (Gaming Mode) கிடைக்கிறது. இயர்பட்ஸ் காதில் இருப்பதை டிடெக்ட் செய்யும்படி வியர் டிடெக்சன் (Wear Detection) கிடைக்கிறது. மோட்டோ ஏஐ (Moto AI) உள்ளிட்ட பீச்சர்களையும் கொடுத்துள்ளது. இப்போது, மோட்டோ பட்ஸ் 2 மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
விலை மற்றும் விற்பனை
பான்டோன் வயலெட் ஐஸ் (Pantone Violet Ice), பான்டோன் கார்பன் (Pantone Carbon) மற்றும் பான்டோன் கிரே மிஸ்ட் (Pantone Grey Mist) ஆகிய மூன்று பிரீமியம் லுக் கொடுக்கும் கலர்களில் இந்த இயர்பட்ஸ் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.2,999 ஆக விலை நிர்ணயம் இருக்கிறது. மே 25 முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
ஆகவே, பிளிப்கார்ட் (Flipkart), மோட்டோரோலா நிறுவனத்தின் வெப்சைட் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம். மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போனானது, இந்திய மார்கெட்டில் ரூ.15,999 பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. அறிமுக சலுகையில் மேலும் மலிவான விலைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications