Home
Gadgets

Moto மாம்ஸ் நீயா இது.. 40 மணிநேர பேட்டரி, Hi-Res ஆடியோ, IP54 ரேட்டிங் உடன் புது Buds.. மே.8 முதல் SALE!

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் இந்திய சந்தையில், அதன் லேட்டஸ்ட் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. அது மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்ஸ் (Moto Buds 2 Plus true wireless stereo) மாடல் ஆகும்

முன்னதாக, பார்சிலோனாவில் நடைபெற்ற MWC 2026-இல் மோட்டோ பட்ஸ் 2 உடன் சேர்த்து அறிமுகம் செய்யப்பட்ட இந்த இயர்போன்ஸ் - சவுண்ட் பை போஸ் (Sound by Bose) தொழில்நுட்பத்துடன் ட்யூன் செய்யப்பட்ட ஹைப்ரிட் டூயல்-டிரைவர் சிஸ்டம், LHDC கோடெக்குடன் கூடிய ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு மற்றும் 55dB வரையிலான அடாப்டிவ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) ஆகியவற்றை வழங்குகின்றன.

Moto மாம்ஸ் நீயா இது.. 40 மணிநேர பேட்டரி, Hi-Res ஆடியோ, IP54 ரேட்டிங்!

மேலும், இது ப்ளூடூத் 6.0 இணைப்பு, இரண்டு டிவைஸ்களை இணைக்கும் வசதி, மற்றும் சார்ஜிங் கேஸுடன் சேர்த்து மொத்தம் 40 மணிநேரம் வரை நீடிக்கும் பேட்டரி லைஃப் ஆகியவற்றையும் வழங்குகின்றன. என்ன விலை? எப்போது முதல் விற்பனை? வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் விலை, விற்பனை விவரங்கள்: இந்தியாவில், மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் இயர்போன்ஸின் விலை ரூ.5,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்போன்ஸ் - பேன்டோன் கூல் ஒயிட் மற்றும் பேன்டோன் சில்ஹவுட் ஆகிய 2 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மே 8 ஆம் தேதியன்று மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும்.

மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் விரிவான அம்சங்கள்:
- 11மிமீ + 6மிமீ ஹைப்ரிட் ஆடியோ அமைப்பு
- "சவுண்ட் பை போஸ்" பிராண்டிங்குடன் ட்யூன் செய்யப்பட்ட நோல்ஸ் பேலன்ஸ்டு ஆர்மச்சர்களுடன் டூயல் டைனமிக் டிரைவர்ஸ்
- ஆழமான கேட்கும் அனுபவத்திற்காக LHDC கோடெக்குடன் கூடிய ஹை-ரெஸ் ஆடியோ
- ஸ்பேஷியல் ஆடியோ ஆதரவு

- இரைச்சலை கட்டுப்படுத்த 55dB வரையிலான அடாப்டிவ் ANC
- பல டிரான்ஸ்பரன்சி மோட்கள்
- அழைப்பின் தரத்தை மேம்படுத்த, என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷனுடன் கூடிய சிக்ஸ் மைக்ரோஃபோன் அமைப்பு
- கிரிஸ்டல்டாக் ஏஐ அம்சம் - ஏஐ அடிப்படையிலான வாய்ஸ் நாய்ஸ் ரிடெக்ஷன்

- ப்ளூடூத் 6.0 ஆதரவு
- டூயல் கனெக்ஷன் ஆதரவு (ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களில் இணைக்கலாம்)
- மோட்டோ பட்ஸ் செயலி மூலம் ஆடியோ ஷேர், லோ லேட்டன்சியுடன் கூடிய கேமிங் மோட், வியர் டிடெக்ஷன் மற்றும் கஸ்டமைஸ் செய்யக்கூடிய டச் கண்ட்ரோல்கள் போன்ற அம்சங்களை அணுகலாம்.

- இந்த ஆப், ப்ரீஸ்ட்களுடன் கூடிய கஸ்டம் ஈக்வலைசர் (Custom equaliser), பிட் டெஸ்ட் (Fit test), மற்றும் இயர்பட்களின் இருப்பிடத்தை கண்டறியும் அல்லது ஒலி எழுப்பும் வசதி ஆகியவற்றையும் ஆதரிக்கிறது.
- இணக்கமான மோட்டோரோலா டிவைஸ்களில், 'கேட்ச் மீ அப்', 'பே அட்டென்ஷன்', 'ரிமெம்பர் திஸ்' போன்ற மோட்டோ ஏஐ டூல்களும், ஏஐ-பவர்டு மொழிபெயர்ப்பும் ஆதரிக்கப்படுகின்றன.

- ஒருமுறை சார்ஜ் செய்தால் எட்டு மணிநேரம் வரையிலும், சார்ஜிங் கேஸை பயன்படுத்தும்போது மொத்தமாக 40 மணிநேரம் வரையிலும் பேட்டரி லைஃப் கிடைக்கும்
- 10 நிமிட சார்ஜ் மூலம் இரண்டு மணிநேரம் வரை பிளே டைம் கிடைக்கும்
- கடைசியாக தூசி மற்றும் நீர் எதிர்ப்பு தரத்தை பூர்த்தி செய்யும் IP54 ரேட்டிங்கை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto Buds 2 Plus with Bose Tuned Hi Res Audio 40 Hours Battery IP54 Launched Sale Starts May 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X