சும்மா கிழி.. BOSE சவுண்ட்.. 55dB ANC.. சிங்கிள் சார்ஜில் 40 மணி நேர பேக்கப்.. புது moto பட்ஸ்.. எந்த மாடல்?
போஸ் ஆடியோ டியூனிங் மட்டுமல்லாமல், டூயல் டைனாமிக் டிரைவர்களை கொண்ட இயர்பட்ஸ் மாடலாக மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் (moto buds 2 plus) அறிமுகமாகி இருக்கிறது. சிங்கிள் சார்ஜில் 40 மணி நேர பேக்கப் கொடுக்கிறது. 6 மைக்குகளுடன் கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது. இந்த மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் பிரீமியம் இயர்பட்ஸ் மாடல்களுக்கு நிகரான பீச்சர்களுடன் இந்த மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் மாடலை மோட்டோரோலா நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. பேஸ் மற்றும் பேலன்ஸ்டு ஆடியோ அனுபவத்தை கொடுக்க டூயல் டைனாமிக் டிரைவர்களை கொடுத்துள்ளது. ஆடியோ மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்களுக்கும் பீச்சர்களை வாரி வழங்கி இருக்கிறது.

6 மைக்குகள் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட மாடலாக இந்த மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் இருக்கிறது. போஸ் டியூனிங் கிடைப்பதால், பிரீமியம் ஆடியோ அனுபவத்தை இந்த மாடலில் எதிர்பார்க்க முடிகிறது. லோவ் லேட்டன்சி ஹை-டெபனிஷன் ஆடியோ கோடெக் கிடைப்பதால், ஹை-ரெசொலூஷன் ஆடியோவை அணுக முடிகிறது.
மேலும், ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) கிடைப்பதால், ஸ்டீரியோ அனுபவத்திலும் பட்டையை கிளப்பும்படி இந்த மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் மாடல் இருக்கிறது. ஏஎன்சி மட்டுமல்லாமல், என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) கொடுத்து இருக்கிறது. இன்டோர் மற்றும் அவுட்டோரிலும் பிரீமியம் குவாலிட்டி கிடைக்கும்.
இதுபோக டூயல் கனெக்சன், ஆடியோ ஷேர் உள்ளிட்ட பீச்சர்களையும் இந்த மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் கொடுத்துள்ளது. ஆட்டோ பாஸ் கொடுக்கும்படி பில்ட்-இன் வியர் டிடெக்சன் (built-in Wear Detection) கிடைக்கிறது. டச் கன்ட்ரோல் கொடுக்கும் மாடலாகவும் இருக்கிறது. வாய்ஸ் அசிஸ்டன்ஸ் கொடுத்து இருக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக மிரளவிட்டுள்ளது.
மோட்டோ ஏஐ பீச்சர்களில் அணுகல் கிடைக்கிறது. ஆகவே, கேட்ச் மீ ஆப் (Catch me up), பே அட்டென்ஷன் (Pay Attention), ரீமெம்பர் திஸ் (Remember this) மற்றும் ஏஐ டிரான்ஸ்லேஷன் (AI Translation) உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. பேன்டோன் கூல் ஒயிட் (PANTONE Cool White) மற்றும் பான்டோன் சில்ஹவுட்ட் (PANTONE Silhouette) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.
ரூ.5999 ஆக விலை இருக்கிறது. மோட்டோ.இன் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. மே 8ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க இருக்கிறது. ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் இயர்பட்களில் கிடைக்கும் பீச்சர்களை அதைவிட மலிவான விலைக்கு பெற்று கொள்ள விரும்பினால், இந்த மோட்டோ மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம்.
மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் அம்சங்கள் (moto buds 2 plus specifications): 11 எம்எம் மற்றும் 6 எம்எம் கொண்ட டூயல் டிரைவர்களை கொடுக்கிறது. 55 dB டைனாமிக் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) கிடைக்கிறது. போஸ் டியூனிங் (Bose Tuning), ஹை-ரெஸ் ஆடியோ (High-Res Audio) மற்றும் ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) உள்ளது.
என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட 6 மைக்குகளை கொடுத்துள்ளது. பட்களில் 9 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். சார்ஜிங் கேஸை கணக்கில் எடுத்தால், 40 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 2 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். IP54 ரேட்டிங் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications