Home
Gadgets

இதுதாங்க ஃபர்ஸ்ட் டைம்.. மிட்-ரேஞ்ச்ல OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. இன்டல் கோர் 5 சிப்செட்.. எந்த லேப்டாப்?

பெயருக்கு ஏற்ப லைட் வெயிட் டிசைனில் இன்டல் கோர் 5/இன்டல் கோர் 7 ப்ராசஸர் மட்டுமல்லாமல், 16 ஜிபி ரேம், 1 டிபி ஸ்டோரேஜ், 2.8K ரெசொலூஷன் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே, ஃபுல்எச்டி ரெசொலூஷன் கொண்ட ஐஆர் கேமரா, டால்பி அட்மோஸ் ஆடியோவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், விண்டோஸ் 11 ஹோம் ஓஎஸ் போன்ற பீச்சர்களுடன் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ புக் 60 (Moto Book 60) லேப்டாப் களமிறங்கி இருக்கிறது. இந்த புதிய லேப்டாப்பின் விவரங்கள் இதோ.

மோட்டோரோலாவின் முதல் லேப்டாப்: இந்திய மார்கெட்டில் பிரீமியம் பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை களமிறக்குவதில் மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தனியிடம் பிடித்துவிட்டது. ஆனால், புதிதாத டேப் அல்லது லேப்டாப் மாடல்களை களமிறக்காமல் இருந்துவந்தது. ஆனால், இப்போது புதிய மோட்டோ பேட் 60 ப்ரோ (Moto Pad 60 PRO) டேப்லெட் மற்றும் மோட்டோ புக் 60 லேப்டாப்பை களமிறக்கி இருக்கிறது.

இதுதாங்க ஃபர்ஸ்ட் டைம்.. மிட்-ரேஞ்ச்ல OLED டிஸ்பிளே.. 16GB ரேம்!

இதில் மோட்டோ புக் 60 லேப்டாப் தனி கவனம் பெற்றுள்ளது. இன்டல் கோர் 5 மற்றும் இன்டல் கோர் 7 ப்ராசஸர்களில் 2 மாடல்கள் இதில் இருக்கின்றன. இந்த இன்டல் கோர் 5 மாடலில் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், இன்டல் கோர் 7 மாடலில் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. மற்ற பீச்சர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ புக் 60 அம்சங்கள் (Moto Book 60 Specifications): இந்த மோட்டோ லேப்டாப்பில் 14 இன்ச் (2880 x 1800 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதுபோன்ற மிட்-ரேஞ்ச் மாடல்களில் பெரும்பாலும் ஐபிஎஸ் டிஸ்பிளே மட்டுமே கிடைக்கும். ஆனால், இதில் ஓஎல்இடி டிஸ்பிளே பேக் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, வீடியோ அனுபவத்தை அல்ட்ரா பிரீமியமாக எதிர்பார்க்கலாம்.

இதுதாங்க ஃபர்ஸ்ட் டைம்.. மிட்-ரேஞ்ச்ல OLED டிஸ்பிளே.. 16GB ரேம்!

மேலும், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் மற்றும் கண்களுக்கு இடையூறு ஏற்படாதபடி ஃபிளிக்கர் ஃப்ரீ சப்போர்ட் கிடைக்கிறது. விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) ஓஎஸ் கிடைக்கிறது. இந்த ஓஎஸ் சிங்கிள் லேங்குவேஜ் சப்போர்ட் மட்டுமே கொடுக்கிறது. ஆகவே, ஆங்கிலம் மட்டுமே கிடைக்கும். முன்பே சொன்னதை போல இன்டல் கோர் 5 (Intel Core 5 210H) ப்ராஸசர் உள்ளது.

அதேபோல இன்டல் கோர் 5 (Intel Core 7 240H) ப்ராஸசர் கொண்ட மாடலும் கிடைக்கிறது. ஜிபியு கார்டை பொறுத்தவரையில் இன்டிகிரேடெட் இன்டல் கிராபிக்ஸ் (Integrated Intel Graphics) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல இன்டல் எஸ்ஓசி (Intel SoC) சிப்செட் மற்றும் ஃப்ர்ம்வேர் டிபிஎம் 2.0 (Firmware TPM 2.0) செக்யூரிட்டி சிப் கிடைக்கிறது. இந்த லேப்டாப்பில் MIL-STD-810H மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் கிடைக்கிறது.

விண்டோஸ் 11 ஹோம் மட்டுமல்லாமல், ஆபீஸ் ஹோம் (Office Home) & ஸ்டூடென்ட் 2024 (Student 2024) சாப்ட்வேர்கள் கிடைக்கின்றன. ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் மற்றும் பிரைவரி ஷட்டர் சப்போர்ட் கொண்ட ஐஆர் கேமரா கிடைக்கிறது. பட்டன்லெஸ் மைலார் (Buttonless Mylar) டச் பேட் கிடைக்கிறது. பேக்லிட் கீ-போர்ட் கிடைக்கிறது. டிஸ்பிளேவில் டச் சப்போர்ட் கிடைக்காது. அதேபோல ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரும் கிடையாது.

இதுதாங்க ஃபர்ஸ்ட் டைம்.. மிட்-ரேஞ்ச்ல OLED டிஸ்பிளே.. 16GB ரேம்!

ஆடியோ பீச்சர்களை பார்க்கையில், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. இன்-பில்ட் டூயல் மைக் அரேய் (Dual mic Array) கிடைக்கிறது. ராபிட் சார்ஜ் பூஸ்ட் (Rapid Charge Boost) சப்போர்ட் கொண்ட 60Wh பேட்டரி கிடைக்கிறது. வயர்லெஸ் கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 7 (Wi-Fi 7) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) சப்போர்ட் கிடைக்கிறது.

போர்ட்களை பார்க்கையில், ஈதர்நெட் (Ethernet) மட்டும் கிடையாது. மற்றபடி 2 யுஎஸ்பி (USB) போர்ட்கள், 2 யுஎஸ்பி-சி (USB-C) போர்ட்கள், 1 எச்டிஎம்ஐ (HDMI) போர்ட் கிடைக்கிறது. மேலும், 1 ஹெட்போன் மற்றும் மைக்ரோன்போன் காம்போ ஜாக் கிடைக்கிறது. இதுபோக 1 மைக்ரோஎஸ்டி கார்டு ரீடர் (microSD Card Reader) கிடைக்கிறது. இந்த மோட்டோ புக் 60 லேப்டாப்பை 2 பிரீமியம் கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஆகவே, பான்டோன் ப்ரோன்ஸ் கிரீன் (PANTONE Bronze Green) மற்றும் பான்டோன் வேட்ஜ்வுட் (PANTONE Wedgewood) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். வெறும் 1.39 கிலோ எடை மட்டுமே வருகிறது. ஸ்மார்ட் கனெக்ட் (Smart Connect), ஸ்மார்ட் கிளிப்போர்ட் (Smart Clipboard), ஸ்வைப் டூ ஷேர் (Swipe to Share) போன்ற பீச்சர்களை இந்த மோட்டோ புக் 60 மாடல் கொடுக்கிறது. இப்போது விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

இதுதாங்க ஃபர்ஸ்ட் டைம்.. மிட்-ரேஞ்ச்ல OLED டிஸ்பிளே.. 16GB ரேம்!

இந்த மோட்டோ புக் 60 விலை (Moto Book 60 Price): 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் இன்டல் கோர் 5 ப்ராசஸர் கொண்ட மாடலின் விலை ரூ.66,990ஆக இருக்கிறது. மல்டிபிள் கார்டுகளுக்கு ரூ.5,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.61,990 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் இன்டல் கோர் 7 ப்ராசஸர் கொண்ட மாடலின் விலை ரூ.74,990ஆக இருக்கிறது.

இந்த மாடலுக்கும் ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.69,990 பட்ஜெட்டில் ஆர்டர் செய்யலாம். மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் மற்றும் இன்டல் கோர் 7 ப்ராசஸர் கொண்ட மாடலின் விலை ரூ.78,990ஆக இருக்கிறது. இந்த மாடலுக்கும் முந்தைய மாடல்களை போலவே ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த டாப்-எண்ட் மாடலை ரூ.73,990 பட்ஜெட்டில் வாங்கலாம்.

மேலும், ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கும் ரூ.5,000 வரையில் பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart), மோட்டோரோலா.இன் (Motorola.in) மற்றும் முன்னணி ரீடெயில் ஸ்டோர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வரும் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. மோட்டோவில் லேப்டாப் வேண்டுமானால், இது மட்டுமே ஒரே ஆப்ஷனாகும்.

Best Mobiles in India

English summary
Moto Book 60 With Intel Core 5 And 7 Launched India Sale From April 23 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X