Home
Gadgets

ரேட்டுனா இதுதான் ப்ரோ.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 1TB ஸ்டோரேஜ்.. புது Moto லேப்டாப்.. எந்த மாடல்?

பிரீமியம் பிராண்ட்களில் மற்ற நிறுவனங்களை பொறுத்துவரை ஓஎல்இடி டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், 1 டிபி ஸ்டோரேஜ் மற்றும் இன்டல் கோர் அல்ட்ரா 7 ப்ராசஸர் கொண்ட லேப்டாப் வாங்க வேண்டுமானால், குறைந்தது ரூ.1 லட்சம் செலவு செய்ய வேண்டும். ஆனால், மோட்டோரோலா நிறுவனம் அதைவிட கம்மியான பட்ஜெட்டில் மோட்டோ புக் 60 ப்ரோ (Moto Book 60 Pro) மாடலை களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய லேப்டாப்பின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மோட்டோ புக் 60 ப்ரோ அம்சங்கள் (Moto Book 60 Pro Specifications): இந்த மோட்டோ லேப்டாப்டில் இன்டர் கோர் அல்ட்ரா 5 (Intel Core Ultra 5) மட்டுமல்லாமல், இன்டல் கோர் அல்ட்ரா 7 (Intel Core Ultra 7) ப்ராசஸர் கிடைக்கிறது. மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. இன்டல் எஸ்ஓசி (Intel SoC) சிப்செட் மற்றும் இன்டிகிரேட் செய்யப்பட்ட இன்டல் கிராபிக்ஸ் (Intel Graphics) கிடைக்கிறது.

ரேட்டுனா இதுதான் ப்ரோ.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 1TB ஸ்டோரேஜ்!

16 ஜிபி ரேம் (8 ஜி + 8 ஜி 2 சிலாட்) கிடைக்கிறது. 14 இன்ச் (2880 x 1800 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2.8K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. பட்டன்லெஸ் மைலார் (Buttonless Mylar) மல்டி-டச் டாச்பேட் (Multi-touch Touchpad) கிடைக்கிறது. 4.72 இன்ச் கொண்ட பிரிசியன் டச்பேட் (Precision TouchPad) வருகிறது.

வழக்கமாக கிடைக்கும் பேக்லிட் கீபோர்ட் (Backlit Keyboard) கிடைக்கிறது. இந்த மோட்டோ புக் 60 ப்ரோ லேப்டாப்பில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொண்ட கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் இன்பிராரெட் (IR) மற்றும் பிரைவசி ஷட்டர் (Privacy Shutter) கிடைக்கிறது. ஆடியோவுக்கு டூயல் மைக்குகள் (Dual Mics) கிடைக்கின்றன. விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) ஓஎஸ் கிடைக்கிறது.

இதுவொரு சிங்கிள் லோங்குவேஜ் (Single Language) வெர்ஷனாகும். அதேபோல ஆபீஸ் ஹோம் & ஸ்டூடன்ட் 2024 (Office Home & Student 2024) கிடைக்கிறது. பர்ம்வேர் டிபிஎம் 2.0 (Firmware TPM 2.0) மற்றும் ஐஆர் கேமராவுக்கு விண்டோ ஹலோ (Windows Hello) செக்யூரிட்டி கிடைக்கிறது. 60Wh ரேபிட் சார்ஜ் பூஸ்ட் (Rapid Charge Boost) கொண்ட பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 65W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.

இதுவொரு யுஎஸ்பி-சி சார்ஜர் (USB-C Charger) மாடலாக இருக்கிறது. கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது. போர்ட்களை பொறுத்தவரையில், 2 யுஎஸ்பி டைப்-சி போர்ட்கள், 1 யுஎஸ்பி 3.2 (USB 3.2), எச்டிஎம்ஐ 2.1 (HDMI 2.1), 1 மைக்ரோஎஸ்டி கார்டு ரீடர் (microSD Card Reader) கிடைக்கிறது. ஹெட்போன் மற்றும் மைக்ரோபோன் சப்போர்ட் கொண்ட 3.5எம்எம் ஜாக் கிடைக்கிறது.

பான்டோன் ப்ரோன்ஸ் கிரீன் மற்றும் பான்டோன் விட்ஜ்வுட் ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் கொடுக்கிறது. இந்த கான்ஃபிகிரேஷனுடன் இன்டல் கோர் அல்ட்ரா 5 வெர்ஷனின் விலை ரூ.64,990ஆக இருக்கிறது. அதேபோல இன்டல் கோர் அல்ட்ரா 7 வெர்ஷனின் விலை ரூ.80,990ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் பேங்க் சலுகை போக ரூ.59,990 ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto Book 60 Pro With Intel Core Ultra 5 And Ultra 5 Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X