Home
Gadgets

சாம்சங் எல்லாம் ஓரம்போ.. 65W சார்ஜிங்.. 14 இன்ச் டிஸ்பிளே.. புது Moto லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்..

மோட்டோரோலா (motorola) நிறுவனம் இந்தியாவில் புதிய மோட்டோ புக் 60 ப்ரோ (Moto Book 60 Pro) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு, தரமான அம்சங்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய மோட்டோ லேப்டாப் வெளிவந்துள்ளது. இப்போது இந்த மோட்டோ புக் 60 ப்ரோ மாடலின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோ புக் 60 ப்ரோ அம்சங்கள் (Moto Book 60 Pro specifications): 14-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) வசதியுடன் இந்த புதிய மோட்டோ புக் 60 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut) உள்ளிட் பல சிறப்பான அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன. எனவே இந்த லேப்டாப் மாடல் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும்.

சாம்சங் எல்லாம் ஓரம்போ.. புது MOTO லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்..

இன்டெல் கோர் அல்ட்ரா 5 மற்றும் கோர் அல்ட்ரா 7 பிராசஸர் (Intel Core Ultra 5 and Core Ultra 7 processors)உடன் மோட்டோ புக் 60 ப்ரோ லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது மோட்டோ 60 ப்ரே லேப்டாப் மாடல். குறிப்பாக இந்த லேப்டாப் மாடலின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம். மேலும் இந்த மோட்டோ புக் 60 ப்ரோ மாடலின் எடை 1.39 கிலோ ஆகும். அனைத்து இடங்களில் இந்த லேப்டாப் மாடலை வைத்துப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos)ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (stereo speakers)உடன் மோட்டோ புக் 60 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் ஃபுல் மெட்டல் சேஸ் (full-metal chassis) உடன் இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது.

மோட்டோ புக் 60 ப்ரோ லேப்டாப் மாடல் ஆனது 60W பேட்டரி வசதியுடன் மோட்டோ புக் 60 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 65W ஃபாஸ்ட் சார்ஜிங்(65W fast charger)வசதியும் உள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி (USB) போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோ புக் 60 ப்ரோ மாடலில் உள்ளது. இதுதவிர பல அசத்தலான அம்சங்கள் இந்த புதிய மோட்டோ புக் 60 ப்ரோ மாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த சாதனத்தின் விலையைப் பார்க்கலாம்.

மோட்டோ புக் 60 ப்ரோ மாடலின் விலை ரூ.59,990-ஆக உள்ளது. ப்ரான்ஸ் க்ரீன் (Bronze Green), வெட்ஜ்வுட் (Wedgewood) நிறங்களில் இந்த புதிய லேப்டாப் மாடலை வாங்கிவிட முடியும். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி பிளிப்கார்ட்டில் இந்த சாதனத்தை வாங்க முடியும். குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் லேப்டாப் மாடல்களுக்கு போட்டியாக இந்த புதிய மோட்டோ லேப்டாப் வெளிவந்துள்ளது.

photo credit: Moto, themobileindian

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto Book 60 Pro laptop launched in India: Check Specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X