மிரட்டலான அம்சங்களுடன் களமிறங்கும் மோட்டோ 360 வாட்ச்!

|

மூன்றாம் தலைமுறை மோட்டோ 360 விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதை மோட்டோரோலா அல்லது லெனோவா நிறுவனம் வெளியிடவில்லை என்றும் அறிவித்துள்ளது. அப்படியானால் யார் இதை வெளியிடப் போகிறார்கள் என்று தெரியுமா?

மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச்

மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச்

அசல் மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் 2014 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்ட்ராய்டு வேர் கொண்ட முதல் வியரபில் (wearable) ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களில் இது ஒன்றாகும். அந்த நேரத்தில் பிளாட் டயர் டிஸ்பிளே விருப்பத்துடன், மோட்டோ 360 மிகவும் கவர்ச்சிகரமாகக் களமிறக்கப்பட்டது.

புதிய மோட்டோ 360 3 ஆம் ஜென்

புதிய மோட்டோ 360 3 ஆம் ஜென்

மோட்டோரோலா 2015 ஆம் ஆண்டில் தனது இரண்டாவது தலைமுறை மோட்டோ 360யுடன் அதைத் தொடர்ந்தது, ஆனால் அதன் பின்னர் நிறுவனம் அணியக்கூடிய விற்பனை களத்திலிருந்து விலகியது. தற்பொழுது மீண்டும் ஒரு புதிய மோட்டோ 360 மாடலுடன் சந்தைக்குள் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளது.

கூகுள் பே தளத்தில் களமிறங்கிய பயோமெட்ரிக் சேவை! இனி பின் நம்பர் தேவையில்லை!கூகுள் பே தளத்தில் களமிறங்கிய பயோமெட்ரிக் சேவை! இனி பின் நம்பர் தேவையில்லை!

அறிமுகம் செய்வது யார்?

அறிமுகம் செய்வது யார்?

புதிய மோட்டோ 360 அறிவிக்கப்பட்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த சாதனம் மோட்டோரோலா அல்லது லெனோவாவால் தயாரிக்கப்படவில்லை. மோட்டோரோலாவிலிருந்து மோட்டோ 360 பிராண்டுக்கான உரிமத்தை ஈபைநொவ்(eBuyNow) என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.

ஒடிபி (OTP)அடிப்படையில் பணத்தை திரும்பப்பெரும் வசதி: ஐஆர்சிடிசி அசத்தல்.!ஒடிபி (OTP)அடிப்படையில் பணத்தை திரும்பப்பெரும் வசதி: ஐஆர்சிடிசி அசத்தல்.!

மோட்டோ 360 சிறப்பம்சம்

மோட்டோ 360 சிறப்பம்சம்

மூன்றாம் தலைமுறை மோட்டோ 360 1.2 இன்ச் கொண்ட 360 x 360 OLED ரவுண்டு டிஸ்பிளேயுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 சிப்,1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்புடன், 355mAh பேட்டரியுடன் களமிறங்கவுள்ளது. புதியமோட்டோ 360 சில்வர், க்ரெய் மற்றும் பான்டோம் பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்யபடுகிறது.ஃபாஸில் ஜென் 5 வாட்சுடன் நேரடியாக மோட்டோ 360 போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Moto 360 3rd Gen Is Finally Coming But It’s Not From Motorola : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X