மோட்டோ குரூப் அறிமுகம் செய்யும் 4K வீடியோ டிரோன்

லிலி டிரோனின் மூலம் 4K வீடியோவை பதிவு செய்யலாம். இது தானாகவே டிராக்கிங் செய்து நமக்கு தேவையானதை வீடியோ படம் எடுத்து கொடுக்கும் தன்மை கொண்டது

By Siva
|

மோட்டோ குரூப் லிலி என்ற பெயரில் அறிமுகம் செய்யவுள்ள புதிய வகை டிரோன் விரைவில் உங்கள் கைகளில் தவழவுள்ளது. ஏற்கனவே இதே பெயரில் இந்நிறுவனத்தின் வேறு பொருள் வெளி வந்திருந்தலும் இந்த பெயரில் வெளிவரவுள்ள புதிய வகை டிரோனில் சிறப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன.

மோட்டோ குரூப் அறிமுகம் செய்யும் 4K வீடியோ டிரோன்

ஒரே ஒரு சிங்கிள் டச் செய்தாலே போதும், இந்த டிரோன் இயங்கும், அதுமட்டுமின்றி ஸ்மார்ட்போன் செயலி மூலம் இந்த டிரோனை கட்டுப்படுத்தலாம். இதற்கு முந்தைய மாடலில் தன்னிச்சையாக டிராக் செய்யும் வகையில் இருந்தது

இந்த டிரோனின் மூலம் 4K வீடியோவை பதிவு செய்யலாம். இது தானாகவே டிராக்கிங் செய்து நமக்கு தேவையானதை வீடியோ படம் எடுத்து கொடுக்கும் தன்மை கொண்டது

உலகின் மிகச்சிறந்த டிரோன் கேமிரா இதில் பொருத்தப்பட்டுள்ளதால் மிகச்சிறப்பான புகைப்படம் மற்றும் வீடியோ ரிசல்ட்டை கொடுக்கும் தன்மை கொண்டது. கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதத்தில் லிலி டிரோன் குறித்து யூடியூபில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ இந்த டிரோனின் சிறப்பம்சங்கள் காரணமாகவே வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் 4மணி நேரம் மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தும் இந்தியர்கள்.!தினமும் 4மணி நேரம் மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தும் இந்தியர்கள்.!

ஆனால் கடந்த ஆண்டு இந்த லிலி டிரோனை திரும்ப பெற்ற இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சுமார் $30 வரை திருப்பி கொடுக்க சம்மதம் தெரிவித்தது. முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு பணம் திருப்பி கொடுக்கும் நடைமுறை நடந்து வருகிறது.

தோல்விக்கு பின்னர் மீண்டும் அதே பெயரில் வெளியாகவுள்ள இந்த புதிய டிரோனில் எந்த அளவுக்கு குறைபாடுகள், நிறைகள் இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த டிரோன் தானாகவே டேக்-ஆப் செய்யும் தன்மை இல்லாததால் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பது தெரியவில்லை

முந்தைய மாடலான லிலி டிரோனை இதன் தயாரிப்பாளர்கள் சுமார் $45 மில்லியன் வரை திரும்ப பெற்றதால் அடுத்த வெற்றிகரமான மாடலின் மூலம் இழந்த பெயரை மீட்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த புதிய டிரோனின் விலை $699 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், முன்கூட்டியே முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த டிரோன் $499 என்ற விலைக்கே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Mota Group which acquired the brand name Lily is ready to ship the next version of Lily drone for $699.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X