இந்த ஏர்பேக் மொபைல் கவர் கண்டிப்பாக உங்களுக்கு பயன்படும்.!
ஜெர்மனியில் இருக்கும் ஆலென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிலிப் ஃபிரென்சில் என்ற மாணவர் தான் இந்த ஏர்பேக் மொபைல் கவரை உருவாக்கியுள்ளார்.
இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் நமக்கு பல்வேறு வகையில் மிகவும் உதவியாய் இருக்கிறது, அதன்படி ஜெர்மனியைச் சேர்ந்த என்ஜினியரிங் மாணவர் ஒருவர், ஸ்மார்ட்போன்களுக்கான ஏர் பேக் போன் கவரை உருவாக்கியுள்ளார், இது ஸ்மார்ட்போனுக்கு மிகவும் பாதுகாப்பான வகையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏர்பேக் மொபைல் கவர் சிறப்பு என்னவென்றால் இவற்றில் உள்ள ஸ்பிரிங் தானாக விரிந்து,மொபைல் அடிபடாமல் பாதுகாக்கிறது,மேலும் தற்சமயம் இந்த புதிய வகை மொபைல் கவருக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

பிலிப் ஃபிரென்சில்
ஜெர்மனியில் இருக்கும் ஆலென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிலிப் ஃபிரென்சில் என்ற மாணவர் தான் இந்த ஏர்பேக் மொபைல் கவரை உருவாக்கியுள்ளார். முதலில் அவர் சிறிய கனமற்ற போன் கவரை உருவாக்க வேண்டும் என் அவர் தேடுதலை தொடங்கியிருக்கிறார், பின்பு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏர்பேக் மொபைல் கவரை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு ஆண்டுகள்:
பிலிப் ஃபிரென்சில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த இந்த சாதனத்திற்கு ஆக்டிவ் டாம்பிங் என்ற பெயர் வைத்துள்ளார், மேலும் பயனத்தின் போது கண்டிப்பாக இந்த சாதனம் மிகவும் உதவியாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சென்சார்:
பிலிப் ஃபிரென்சில் உருவாக்கிய இந்த மொபைல் கவரில் சென்சார் ஒன்று இடம்பெற்றுள்ளது, இது மொபைல் கீழே விழும்போது, அந்த சென்சார், 4 ஸ்பிரிங்குகளை தட்டிவிட்டு மொபைலை எவ்வித சேதம் இன்றி காக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்புரிமை:
இந்த மொபைல் கவர் இதுவரை விற்பனைக்கு வரவில்லை, இதற்கான காப்புரிமையை பிலிப் பெற்றுள்ளார், பிலிப் உருவாக்கிய இந்த சாதனத்தை பாராட்டி ஜெர்மனி சொஸைட்டி ஆஃப் மெக்கட்டிரானிக்ஸ் அமைப்பு பாராட்டை தெரிவித்துள்ளது. விரைவில் இந்த சாதனம்
அனைவரின் கைகளிலும், பிலிப்பின் இந்த ஏர் பேக் மொபைல் கவர் சாதனத்தை பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications