பொளக்குது ஆடியோ.. பட்ஜெட்ல DUAL டிரைவர்கள்.. 3D சவுண்ட் ஸ்டேஜ்.. ஸ்விஃப்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
டூயல் கலர் டோனில் பிரீமியம் மெட்டாலிக் பாடி டிசைன் மட்டுமல்லாமல், டூயல் டிரைவர்கள், டூயல் மைக்குகள், 3டி சவுண்ட்ஸ்டேஜ், IPX 4.0 வாட்டர்ப்ரூஃப், என்விரான்மென்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன், ஃபாஸ்ட் சார்ஜிங், 8.5 பிளேபேக், கேமிங் மோட், லாஸ்லெஸ் ஆடியோ போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களை பட்ஜெட்டில் கொடுக்கும் மிவி சூப்பர்பாட்ஸ் டூயடோ (Mivi SuperPods Dueto) மாடலானது, இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த மிவி மாடலின் விலை, விற்பனை மற்றும் முழு பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.
மியூசிக் பிரியர்களிடையே நாய்ஸ் கேன்சலேஷன், பேஸ் அவுட்புட் கொடுக்கும் டிரைவர்கள், லோவ் லேட்டன்சி மோட், குயிக் கனெக்டிவிட்டி, மல்டி டிவைஸ் கனெக்டிவிட்டி, ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும் இயர்பட்ஸ்களே நல்ல வரவேற்பை பெறுகின்றன. இதை அப்படியே மிவி சூப்பர்பாட்ஸ் டூயடோ செய்திருக்கிறது.

மிவி சூப்பர்பாட்ஸ் டூயடோ அம்சங்கள் (Mivi SuperPods Dueto Specifications): இந்த மிவி மாடலில் டூயல் டோன் மெட்டாலிக் கிளாஸ் பினிஷிங் (Dual-tone Metallic Glass Finishing) கொண்ட பாடி மற்றும் பட்கள் வருகின்றன. சார்ஜிங் கேஸில் சார்ஜிங் இன்டிகேட்டர் எல்இடி லைட்கள் இடம் பெற்றுள்ளன. இந்த டிசைனில் 5 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஆகவே, லாவெண்டர் (Lavender), கோமட் ப்ளூ (Comet Blue), ட்ரைடன் கோல்டு (Triton Gold), மீட்டியர் பிளாக் (Meteor Black) மற்றும் காலிஸ்டோ பீச் (Callisto Peach) கலர்கள் வருகிறது. இந்த மிவி மாடலில் மற்ற இயர்பட்களை போலல்லாமல், 2 டிரைவர்கள் வருகின்றன. ஆகவே, 13எம்எம் வூப்பர் மற்றும் 6எம்எம் ட்வீட்டர் வருகிறது.
இந்த டிரைவர்கள் மூலம் பேஸ் ஆடியோ மட்டுமல்லாமல், கிரிஸ்டல் கிளியர் வோகல் மற்றும் பேலன்ஸ் ஆடியோ அவுட்புட் கிடைக்கும். இதுபோக 3டி சவுண்ட்ஸ்டேஜ் (3D Soundstage) சப்போர்ட் வருகிறது. ஆகவே, சவுண்ட் டைமென்சன் (Sound Dimension), டீப் பூஸ்ட் (Deep Boost) அனுபவம் பிரீமியம் குவாலிட்டியாக இருக்கும்.

இந்த மிவி சூப்பர்பாட்ஸ் டூயடோ மாடலின் பேட்டரியை பார்க்கையில், கேஸ் மூலம் 50 மணி நேரம் பிளேபேக் பெற்று கொள்ளலாம். அதேபோல பட்களில் 8.5 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஸ்விஃப்ட் சார்ஜிங் (Swift Charging) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, வெறும் 10 நிமிடங்களுக்கு 500 நிமிடங்கள் பிளே டைம் கிடைக்கும்.
கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களுக்கு ஏஐ சப்போர்ட் கொண்ட என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) வருகிறது. இதன் மூலம் வாய்ஸ் டிடெக்ட் செய்யப்பட்டு, நாய்ஸ் குறைக்கப்படும். டிராபிக் உள்ளிட்ட அவுட்டோர்களில் இருந்தும், வாய்ஸ் போகஸ் மற்றும் கிளியர் கம்யூனிகேஷன் பெற்று கொள்ளலாம்.
இந்த மாடலில் ஈகியூ மோட்கள் (EQ Modes) வருகின்றன. கேமிங் பிரியர்களுக்காக 50 எம்எஸ் அல்ட்ரா லோவ் லேட்டன்சி மோட் (Ultra Low Latency Mode) வருகிறது. இந்த மிவி பட்டில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வருகிறது. IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. ஏஏசி (AAC) லாஸ்லெஸ் ஆடியோ சப்போர்ட் வருகிறது.
ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களை கனெக்ட் செய்து கொள்ளலாம். இவ்வளவு பீச்சர்களை கொண்ட இந்த மிவி சூப்பர்பாட்ஸ் டூயடோ மாடலின் விலை ரூ.1,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. பட்ஜெட்டில் பீரிமியம் பீச்சர்கள் கொண்ட இயர்பட்ஸ் வேண்டுமானால், இந்த மிவி மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








