அடிச்சு புடிச்சு வாங்குவீங்க.. வெறும் ரூ.1,399 போதும்.. DUAL கனெக்டிவிட்டி.. 55H பேக்கப்.. NOISE கேன்சலேஷன்!
மிரட்டலான பிரீமியம் மெட்டாலிக் டிசைன், மல்டி டிவைஸ் கனெக்டிவிட்டி, சூப்பர் சாலிட் டிரைவர்கள், நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் மிவி டுயோபாட்ஸ் ஏ750 (Mivi DuoPods A750) இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் இதோ.
மிவி டுயோபாட்ஸ் ஏ750 அம்சங்கள் (Mivi DuoPods A750 Specifications): இந்த மிவி இயர்பட்ஸ் கம்மியான பட்ஜெட்டிலும் மல்டி கனெக்டிவிட்டி (Multi Connectivity) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, லேப்டாப் (Laptop) மற்றும் மொபைல் (Mobile) போன்ற 2 டிவைஸ்களில் ஒரே நேரத்தில் டூயல் பேரிங் (Dual Pairing) செய்து பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த மிவி டுயோபாட்ஸ் மாடலானது, மெட்டாலின் பினிஷ் பட்ஸ் (Metallic Finish Buds) கொண்டு பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த மிவி பட்ஸில் 13 மிமீ எலெக்ட்ரோலேட்டட் டிரைவர்கள் (Electroplated Drivers) கொடுக்கப்பட்டுள்ளன. இதுவொரு சூப்பர் சாலிட் டிரைவர் (Super Solid Driver) மாடலாகும்.
அதுமட்டுமல்லாமல், ஏஐ (AI) சப்போர்ட் கொண்ட என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) டெக்னாலஜி கொண்டிருக்கிறது. ஆகவே, இன்டோர் மட்டுமல்லாமல் அவுட்டோரிலும் வாய்ஸ் காலிங் (Voice Calling) மற்றும் மியூசிக் (Music) அனுபவம் கிரிஸ்டல் கிளியர் ஆடியோ குவாலிட்டியில் (Crystal Clear Audio Quality) இருப்பதை எதிர்பார்க்கலாம்.
இந்த மிவி டுயோபாட்ஸ் ஏ750 மாடலில் ப்ளூடூத் வெர்ஷன் 5.3 (Bluetooth Version 5.3) பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 240 மீ வரையில் கனெக்டிவிட்டி ரேஞ்ச் (Connectivity Range) கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு ரூமில் இருந்து மற்றொரு ரூமிற்கு சென்றாலும், கிளியர் கனெக்டிவிட்டியை கேட்க முடிகிறது.

இந்த மாடலில் ஏஏசி கோடக் சப்போர்ட் (AAC Codec Support) சப்போர்ட் வருகிறது. இந்த மிவி டுயோபாட்ஸ் ஏ750 இயர்பட்ஸ் பக்காவான பேட்டரி பேக்கப் (Battery Backup) கொண்டிருக்கிறது. ஆகவே, இதை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 55 மணி நேரத்துக்கு பிளேபேக் டைம் (Play Back Time) கொடுக்கிறது.
அதோடு ஸ்விஃப்ட் சார்ஜ் டெக்னாலஜி (Swift Charge Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சார்ஜிங் டெக்னாலஜி மூலம் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், தொடர்ந்து 500 நிமிடங்களுக்கு பிளேடைம் பெற்று கொள்ள முடியும். இதுவொரு மேட் இன் இந்தியா (Made in India) தயாரிப்பாகும்.
இந்த மிவி டுயோபாட்ஸ் ஏ750 மாடலுக்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது. அதோடு ப்ரீ ஷிப்பிங் (Free Shipping) சலுகை கொடுக்கப்படுகிறது. மெட்டாலிக் டிசைனில் ப்ளூ (Blue), பிளாக் (Black), கிரீன் (Green) மற்றும் வைட் (White) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் மார்கெட்டில் விற்பனைக்கு வருகிறது. அமேசான்.இன் (Amazon.in) மற்றும் மிவி.இன் (Mivi.in) ஆகிய 2 தளங்களில் ஆர்டர் செய்து வாங்கி கொள்ள முடியும். இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த இயர்பட்ஸ் மாடலின் விலை வெறும் ரூ.1,399ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலையானது, அறிமுக சலுகை மட்டுமே என்பதால், விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, கம்மி பட்ஜெட்டில் மல்டி கனெக்டிவிட்டி, நாய்ஸ் கேன்சலேஷன், பிரீமியம் டிசைன் கொண்ட இயர்பட்ஸ் வேண்டுமானால், இந்த மிவி டுயோபாட்ஸ் ஏ750 மாடலை தேர்வு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








