வெறும் ரூ.999 மட்டுமே: அட்டகாச அம்சம், அதிவேக சார்ஜிங்: கிளாசிக் வயர்லெஸ் மிவி இயர்போன்கள்- குறுகிய காலமே!

|

மிவி தனது புதிய வயர்லெஸ் இயர்போன்களை காலர் கிளாசிக் என அறிமுகம் செய்துள்ளது. இந்த வயர்லெஸ் இயர்போன்கள் வேகமான சார்ஜிங் அம்சத்தோடு வருகிறது. இந்த விலை பட்டியலில் கிடைக்கும் ஒரே வயர்லெஸ் இயர்போன்கள் இதுவாகும்.

புதிய வயர்லெஸ் இயர்போன்கள்

புதிய வயர்லெஸ் இயர்போன்கள்

மிவி தனது புதிய வயர்லெஸ் இயர்போன்கள் ஆனது காலர் கிளாசிக் என அறிமுகம் செய்துள்ளது. இந்த கிளாசிக் வயர்லெஸ் இயர்போன்களானது ரூ.999 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. இது 24 மணிநேர ப்ளே டைம் ஆதரவு மற்றும் சிறந்த கட்டமைப்பு அம்சத்தோடு வருகிறது. இந்த விலைப்பிரிவில் கிடைக்கும் ஒரே வயர்லெஸ் இயர்போன்கள் இதுவாகும்.

காலர் கிளாசிக் ப்ளூடூத் இயர்போன்

காலர் கிளாசிக் ப்ளூடூத் இயர்போன்

காலர் கிளாசிக் தடையற்ற இணைப்பிற்காக ப்ளூடூத் 5.0 உடன் தெளிவான அழைப்பு அனுபவத்திற்கான வலுவான எம்இஎம்எஸ் மைக்கை கொண்டிருக்கிறது. அதேபோல் நீண்ட பயன்பாட்டிற்கு குறைந்த எடை அனுபவத்தோடு வருகிறது. இசையை கட்டுப்படுத்த இன்-லைன் 3 பட்டன் ரிமோட்டைக் கொண்டிருக்கிறது. தொலைபேசியை தொடாமல் அழைப்புகளை எடுக்கலாம், இடைநிறுத்தலாம், அழைப்புகளை நிராகரிக்கும் அம்சத்தோடு வருகிறது.

உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன்

உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன்

அதேபோல் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் கூகுள் அசிஸ்டெண்ட் மற்றும் சிரி குரல் உதவியாளர் ஆதரவோடு வருகிறது. மேலும் இதை அவிழ்த்து பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் இதன் இரண்டு குழாய் காந்தங்களும் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொள்கிறது. இப்படி ஒட்டிக் கொண்டு இருக்கும்பட்சத்தில் சாதனங்கள் செயலிழந்தும் ஒட்டி இருந்ததை பிரிக்கும் பட்சத்தில் இயக்கமும் தொடங்கும்.

பிளிப்கார்ட்டில் அறிமுக சலுகையாக

பிளிப்கார்ட்டில் அறிமுக சலுகையாக

மிவி சாதனத்தின் 10 நிமிட சார்ஜிங் 10 மணிநேர பின்னணி ப்ளே நேரத்தை வழங்குகிறது. வயர்லெஸ் இயர்போன்கள் ஐபிஎக்ஸ் 5 என மதிப்பிடப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த சாதனம் நீர் மற்றும் வியர்வை ரெசிஸ்டெண்ட் (எதிர்ப்பு) அம்சத்தோடு வருகிறது.

மிவி இயர்போன்கள் ஆழமான மற்றும் சக்திவாய்ந்த பேஸ் அம்சத்தோடு வருகிறது. இது இந்தியாவில் ஆடியோ ஃபில் விருப்பத்தோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிவி காலர் கிளாசிக் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே சிறப்பு அறிமுக விலையில் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. மிவி காலர் கிளாசிக் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே சிறப்பு அறிமுக விலையில் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mivi Collar Classic Wireless Earphones Launched at Rs.999

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X