குடைக்குள் சாரல் மழை.. சில் காற்று.. இப்படி ஒரு ஸ்மார்ட் குடையை நீங்கள் பார்த்திருக்கமாடீர்கள்.. விலை என்ன?
மிஸ்ட் ஃபேன்னுடன் குடை (Mist fan umbrella), இது சாதாரண குடை அல்ல, இந்த குடையின் மேற்பகுதியில் ஒரு பேன் உள்ளது. இதன் அடிபடுத்தியில் ஒரு சிறிய வாட்டர் டேங்க் உள்ளது. இது தண்ணீரை மிஸ்ட் போல தெளிக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
வெயிலின் தாக்கம் மீண்டும் தலைதூக்க துவங்கியுள்ளது. பல மாநிலங்களில் வெப்ப அழை காட்டுத் தீப்போல காற்றை வீசி வருகிறது. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெயிலின் இருந்து தப்பிக்க பல்வேறு வழிகளை மக்கள் இப்போது நாடத் துவங்கியுள்ளனர். அந்த வரிசையில், வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க இப்போது பல்வேறு வகையான கேட்ஜெட்கள் (cooling gadgets) விற்பனை செய்யப்படுகிறது.

மிஸ்டர்ப்ரீஸ் சன் அம்பர்லா உடன் ஃபேன் மற்றும் மிஸ்ட்டர் (MISTERBREEZE Sun Umbrella with Fan and Mister):
இதில் தற்போது மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு சூப்பர் சாதனமாக பிரபலமடைந்து வருவது தான், இந்த புது ஸ்மார்ட் அம்பர்லா (Smart Umbrella) சாதனம். இந்த சாதனம் கொடூரமான வெப்பத்தில் இருந்து தப்பிக்க பெரிதும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. காரணம், இது சாதாரண குடை (umbrella) இல்லை. வெப்பத்தை தணிக்க இதில், மிஸ்ட் ஃபேன் (Mist Fan) சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.
இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட் குடை, மிஸ்டர்ப்ரீஸ் சன் அம்பர்லா உடன் ஃபேன் மற்றும் மிஸ்ட்டர் (MISTERBREEZE Sun Umbrella with Fan and Mister) உடன் வருகிறது. முதலில் இந்த மிஸ்டர்ப்ரீஸ் குடை பற்றிய விபரங்களை பற்றி இப்போது பார்க்கலாம். இந்த குடை சூரியனில் இருந்து வெளிவரும் UV கதிர்களை 99.9% நிராகரிக்கிறது. இது வெப்ப கதிர்களை ரிப்லேட் செய்கிறது.
இந்த ஸ்மார்ட் குடை (Smart Umberlla) உள்ளே இன்-பில்ட் ஆக ஃபேன் பொருத்தப்பட்டுள்ளது. உங்கள் கை அருகே இருக்கும் ஸ்விட்சை பிரஸ் செய்தால், குடை மேற்பகுதியில் உள்ள ஃபேன் வேகமாக சுழன்று காற்றை குடைக்குள் இருக்கும் நபருக்கு தருகிறது. இந்த ஃபேன் கூலிங் ஃபேனாகவும் செயல்படுகிறது. ஆம், இது சிறிய நீர்துளிகளை தெளிக்கும் மிஸ்ட் ஃபேனாகவும் செயல்படுகிறது.

குடைக்குள் சாரல் மழை பொழியும் குடை.. என்ன விலை தெரியுமா?
இந்த வெப்ப காலத்தில் இருந்து தப்பிக்க, இந்த குடையின் கைப்பிடியின் இறுதியில் வாட்டர் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் நீரை நிரப்பினால் போதும், இந்த குடையின் கைப்பிடியில் உள்ள பட்டனை பிரஸ் செய்தால், மேலே சுழலும் ஃபேன் இல் இருந்து தண்ணீர் உடன் காற்று சில் என்று வீசப்படும். இதனால், உங்கள் உடலுக்கு தேவையான குளிர்ந்த காற்று வீசப்படுகிறது.
இந்த MISTERBREEZE Sun Umbrella with Fan and Mister சாதனம் அமேசான் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சாதனம் இப்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், இதன் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த மிஸ்ட் ஃபேன் உடன் வந்த குடை ரூ. 11,579 விலையில் வருகிறது. வெளியில் செல்லும் பொழுது அதிக வெப்பத்தால், தவிக்கும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளது.


Click it and Unblock the Notifications








