Home
Gadgets

விற்பனைக்கு வந்த மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ எக்ஸ் 2020: விலை, அம்சங்கள்!

மைக்ரோசாப்ட் எஸ்.க்யூ 2 செயலியுடன் கூடிய ப்ரோ எக்ஸ் 2020 இந்தியாவில் விற்பனை தொடங்கியுள்ளது. இது புதிய பிளாட்டினம் அம்சத்துடன் இந்திய சந்தையில் கிடைக்கிறது. மைக்ரோசாப்ட் புதிய சர்பேஸ் ப்ரோ எக்ஸ் சமீபத்திய விண்டோஸ் அடிப்படையிலான டேப்லெட்டாக இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

15 மணிநேர பேட்டரி ஆயுள்

15 மணிநேர பேட்டரி ஆயுள்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும். மே மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமான சர்பேஸ் ப்ரோ எக்ஸ் 2020 பல்வேறு மேம்பாடு சிறப்பம்சத்தை கொண்டிருக்கிறது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ எக்ஸ் 2020 இந்தியாவில் கிடைக்கும் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். இது 256 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய சர்பேஸ் ப்ரோ எக்ஸ் 2020 ரூ.1,49,999 எனவும் 512 ஜிபி வேரியண்டின் விலை ரூ.1,78,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 2020

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 2020

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 2020 டேப்லெட் பிளாட்டினம் மற்றும் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இதில் 4 ஜி எல்டிஇ இணைப்பு அம்சம் உள்ளது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ எக்ஸ் உடன் மைக்ரோசாப்ட் சிக்னேச்சர் கீபோர்டு மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

பிளாட்டினம், ஐஸ் ப்ளூ, பாபி ரெட்

பிளாட்டினம், ஐஸ் ப்ளூ, பாபி ரெட்

இது பிளாட்டினம், ஐஸ் ப்ளூ, பாபி ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்டு விற்பனை தளங்களில் இந்த புதிய மாடல் கிடைக்கும் என்றாலும் அமேசான் உள்ளிட்ட சில ஆன்லைன் தளங்களில் இதன் விற்பனை இன்னும் தொடங்கப்படவில்லை.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ எக்ஸ் 2020 விவரக்குறிப்புகள்

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ எக்ஸ் 2020 விவரக்குறிப்புகள்

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ எக்ஸ் 2020 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது விண்டோஸ் 10 மூலம் இயங்குகிறது, 13 அங்குல பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே 2,880x1,920 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் எஸ்.க்யூ 2 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது குவால்காம் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட சிப்செட் ஆகும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்

குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்

4 ஜி இணைப்பிற்கான குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ் 24 எல்டிஇ சிப்செட் உள்ளது. டேப்லெட் நானோ சிம் மற்றும் இசிம் ஸ்லாட்டுகளுடன் வருகிறது. கூடுதல் இணைப்பிற்கு புதிய சர்பேஸ் ப்ரோ எக்ஸ் ப்ளூடூத் 5.0, வைஃபை, இரண்டு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்களுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Microsoft Surface Pro X2020 Now Can Purchase in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X